Recent Posts

சிலி நாட்டில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7 புள்ளிகளாக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனையடுத்து மீண்டும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று (புதன் கிழமை) 8.2 ரிக்டர் அளவு நில நடுக்கமும், அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. இதில், 6 பேர் உயிரிழந்தனர்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 17 அதிர்வுகள் குறிப்பிட்ட இடைவெளியில் ஏற்பட்டன என சிலி அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சில அதிர்வுகள் சில நாட்களுக்கு இருக்கும் என சிலி பல்கலைக்கழக நில அதிர்வுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

சிலியில் மீண்டும் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

By Battinews batticaloa → Friday, April 4, 2014

காணாமல் போன மலேசிய விமானம் உலகம் முழுவதையும் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்க, முன் சக்கரங்களே இல்லாமல் தரையிறங்கிய விமானம் பிரேசில் நாட்டு மக்களை கதிகலங்க வைத்துள்ளது.

பிரேசில் நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் விமானப் போக்கு வரத்து நிறுவனம் ஏவியன்கா பிரேசில் என்பதாகும். உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் இது முக்கியப் பங்காற்றி வருகிறது.

முன் சக்கரம் இல்லாமல் தரையிறங்கிய விமானம்: 49 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

By Battinews batticaloa → Monday, March 31, 2014
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த சத்யா நடேலா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் அதிபர் பில்கேட்ஸ் தனது பதவியை இன்று இராஜினாமா செய்தார்.

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கடமையாற்றிய ஸ்டீவ் போல்மர் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து அப்பதவிக்குப் பொருத்தமானவரை தெரிவு செய்யும் பொருட்டு சிறப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

இந்தக் குழு தெரிவு செய்திருந்தவர்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த சத்யா நடேலாவும் உள்ளடக்கப்பட்டிருந்தார்.

அவரையே புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்திருப்பதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள  பில்கேட்ஸ் அந்நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகராக தன் பணியை தொடர உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் புதிய நிர்வாக அதிகாரியாக இந்தியர்!

By Battinews batticaloa → Wednesday, February 5, 2014
வானியல் ஆராய்ச்சியாளர்கள், பூமியில் இருந்து 22 மில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தில் முன் எப்போதும் பார்த்திராத விண்வெளி வழியாக பாயும் ஹைட்ரஜன் ஆறு கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறியுள்ளனர். அமெரிக்காவின் மேற்கு விர்ஜினீயா பல்கலை கழகத்தின் விண்வெளி விஞ்ஞானி டி.ஜெ.பி. பிகானோ தலைமையிலான குழுவினர் ஒன்று ஆய்வு மேற்கொண்டுள்ளது.

அந்த ஆய்வில் விண்வெளியில் ஹைட்ரஜன் ஆறு போன்று ஓடுவதை கண்டுபிடித்துள்ளனர். அது மிகவும் மங்கலாக, மெலிதாக பரவி ஓடுகிறது. இது விண்வெளியின் பால் மண்டலத்தில் என்.ஜி.சி. 6946 என்ற விண்மீன் கூட்டத்துக்குள் ஊடுருவி பாய்கிறது. இவையே விண்மீன் கூட்டங்களை ஒன்றிணைத்து புதிய நட்சத்திரத்தை உருவாக்குகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:

விண்வெளியில் ஆறு போல் ஓடும் ஹைட்ரஜன் கண்டுபிடிப்பு

By Battinews batticaloa → Saturday, February 1, 2014
ஈரான் நாட்டை சேர்ந்த முதியவர் ஒருவர் 60 ஆண்டுகளாக குளிக்காமல் சாதனை படைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
தினந்தோறும் குளிக்காவிட்டால் எதையோ பறிகொடுத்தது போன்று அனைவரும் உணர்வார்கள்.

உலகமே இவ்வாறு சுழன்று கொண்டிருக்க, ஈரானை சேர்ந்த 80 வயது முதியவர் அமோவ் ஹாஜி, கடந்த 60 ஆண்டுகளாக குளிக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

60 ஆண்டுகளாக குளிக்காமல் சாதனை! 'உயிரே போனாலும் இனி குளிக்கப்போவது இல்லை'

By Battinews batticaloa → Sunday, January 12, 2014
அமெரிக்காவில் ஆன் லைன் மூலம் மனித மூளை உட்பட திசுக்களை விற்ற குற்றத்திற்காக 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இண்டியானா போலிஸ் மாகாணத்தை சேர்ந்த டேவிட் சார்லஸ் என்ற 21 வயது நபரை போலீசார் ஆன் லைனில் "ஈ பே" மூலம் மனித மூளையை விற்றதாக கூறி கைது செய்தனர்
அங்குள்ள இண்டியானா மருத்துவ வரலாற்று அருங்காட்சியகத்தில் 2013 ஆம் ஆண்டு ஆறு முறை திருடிய இந்த நபர், மனித மூளை உட்பட பலவகையான திசுக்களை திருடியுள்ளார்.

அந்த அருங்காட்சியகத்தில் 2000 நோயாளிகளின் உடல் உறுப்புகள் உள்ளதாகவும், அவை அனைத்தும் 1890 முதல் 1940 வரையான காலத்திற்கு உட்பட்டவை என்றும் கூறப்படுகிறது.

ஜார்களில் வைக்கப்பட்டிருந்த இம்மூளைத் திசுக்களை "ஈ பே" இணையதளம் மூலம் டேவிட் சார்லஸ் விற்றுள்ளார்.

இந்நிலையில், சார்லஸிடம் 6 மூளைகளை 670 டாலர்களுக்கு வாங்கிய நபர் ஒருவர் அவை அருங்காட்சியகத்திலிருந்து எடுக்கப்பட்டது எனத் தெரிந்தவுடன் உடனடியாக இண்டியானா போலிஸ் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து டேவிட் சார்லஸை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

மனித மூளையை ஆன் லைனில் விற்ற இளைஞர் கைது

By Battinews batticaloa → Sunday, January 5, 2014
துபையில் சின்னச் சின்னக் காரணங்களுக்காக பெண்கள் விவாகரத்து கேட்கும் போக்கு அதிகரித்துள்ளது.

திருமணமான ஒரே வாரத்தில் குவைத்தைச் சேர்ந்த ஒரு பெண் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார். என் கணவருக்கு உணவு நாகரிகம் தெரியவில்லை. முறையாக உணவருந்தத் தெரியவில்லை. அவர் உணவருந்துவதைப் பார்த்தால் வெறுப்பாக இருக்கிறது. இனிமேல் அவருடன் சேர்ந்து வாழ முடியாது.ஆகவே, விவாகரத்து வேண்டும் எனக் கோரியுள்ளார்.

மற்றொரு பெண் விசித்திரமான காரணத்துக்காக விவாகரத்து கோரியுள்ளார். என் கணவர் பற்பசை டியூப்பை கீழிருந்து பிதுக்காமல், நடுவில் பிதுக்குகிறார். எத்தனை முறை சொன்னாலும் கேட்பதில்லை. பிடிவாதம் பிடிக்கிறார். எனக்கு விவாகரத்து வேண்டும் எனக்கோரி, வழக்க றிஞரை அணுகியுள்ளார்.

இதற்கெல்லாமா விவாகரத்து ?

By Battinews batticaloa → Thursday, January 2, 2014
இணையத்தில் ஆர்டர் செய்த அரை மணி நேரத்தில் பொருட்கள் வீடு தேடி விமானத்தில் வந்து சேர்ந்தால் எப்படி இருக்கும்? இன்று இது நம்ப முடியாத அதிசயமாக இருக்கலாம். ஆனால், நாளை இந்த மாயம் நடைமுறையில் சாத்தியமாகலாம்.

விமானத்தில் வீடு தேடி வரும் பார்சல்: அமேசான் திட்டம்

By Battinews batticaloa → Friday, December 6, 2013
தனது அன்பார்ந்த ரசிகர்களுடன் நேரடி தொடர்பு வைத்துக்கொள்வதற்காக தயாராகிவிட்டார் நடிகர் வடிவேலு.

நீண்ட இடைவேளைக்குப் பின் நமது வைகைப்புயல் வடிவேலு நடித்து வரும் படம் ‘ஜகஜால புஜபல தெனாலிராமன்’. இதில் வைகைப்புயலுக்கு ஜோடியாக ‘பில்லா 2′ புகழ் மீனாக்ஷி திக்ஷித் நடிக்கிறார்.

‘போட்டா போட்டி’ புகழ் யுவராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. டி.இமான் இசையமைக்கும் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது ஏ.ஜி.எஸ். நிறுவனம்.

இதில் வடிவேலு இரண்டு வேடங்களில் தோன்றி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க தீயா வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் தனது ரசிகர்களிடம் நேரடியாக தொடர்பு வைத்துக்கொள்ள விரும்பிய வைகைப்புயல், தற்போது சமூக வலைதளமான ட்விட்டரில் களமிறங்கிவிட்டார்.

https://twitter.com/Actor_Vadivelu


Tags:

ட்விட்டரில் வடிவேலு!

By Battinews batticaloa → Wednesday, December 4, 2013
மாஸ்கோவிலிருந்து டாடர்ஸ்தான் குடியரசின் தலைநகர் கஸானுக்குப் சென்ற போயிங் 737 பயணியர் விமானம் விமான நிலையத்தில் தரை இறங்கிய போது விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 44 பயணிகள், 6 சிப்பந்திகள் என 50 பேர் உயிரிழந்தனர். தற்போது 50 பேர்களின் உடல்கள்  கண்டறியப்பட்டுள்ளன.

மேலும் உயிரழந்தவர்களின் விபரங்களை கண்டறியும் பணி இன்று நடைபெறுகிறது. ரஷிய தரப்பில் உயிரிழந்தோர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் விமான விபத்து 50 பேர் பலி

By Battinews batticaloa → Tuesday, November 19, 2013
GFGF
Tags:

GFG

By Battinews batticaloa → Monday, October 7, 2013

இங்கிலாந்தில் உள்ள பிராட்பேர்டு நகரை சேர்ந்தவர் மரீனா சேப்மேன் (63). இவர் குழந்தையாக இருந்தபோது சிலர் இவரை கடத்திச் சென்று கொலம்பியாவில் உள்ள ஒரு அடர்ந்த காட்டில் அனாதையாக விட்டு சென்றனர்.
Tags:

காட்டில் குரங்குகளால் வளர்க்கப்பட்ட பெண்

By Battinews batticaloa → Friday, April 5, 2013

இந்தோனேசியாவின் சுமத்திரா தீவுகளில் உள்ள அகதிகள் முகாமில், மியான்மாரில் இருந்து வந்த முஸ்லிம் மற்றும் புத்த மதத்தைச் சேர்ந்த அகதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இவர்கள் இரும்புக் கம்பி, மரக் கட்டைகள் மற்றும் கத்தியைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். 2 மணி நேரம் நீடித்த இந்த மோதலில் 8 பேர் உயிரிழந்தனர்.
Tags:

முஸ்லிம் மற்றும் புத்த மதத்தைச் சேர்ந்த அகதிகளுக்கிடையே மோதல் ! 8 பேர் பலி

By Battinews batticaloa →
பெப்பிலியானவில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் மீது இனந்தெரியாத சிலர் இன்று மாலை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அந்த இடத்தில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள்...

வர்த்தக நிலையம் ஒன்றின் மீது இனந்தெரியாத சிலர் இன்று மாலை தாக்குதல்

By Battinews batticaloa → Friday, March 29, 2013
malnourished 4-year-old boy found inside an apartment with the body of his mother, dead for days, had resorted to eating from a bag of sugar and weighed only 26 pounds

இறந்த தாயுடன் நான்கு வயது சிறுவன் ஒருவன் 5 நாட்கள் தன்னந்தனியாக வாழ்ந்துள்ள அதிர்ச்சி சம்பவம் ஒன்று நியூஜெர்சியில் நடந்துள்ளது.

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் நகரில் இருந்து 7 மைல் தொலைவில் ஒரு டவுன்ஷிப் உள்ளது. அந்தப் பகுதியில் இருந்த ஒரு குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசுவதாக குடியிருப்பின் பராமரிப்பாளர் நேற்று காலை காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த காவல்துறையினர், பாதி திறந்திருந்த நிலையில் உள்ள அந்த வீட்டின் கதவை உடைத்துத் திறந்தனர்.

இறந்த தாயுடன் 5 நாட்கள் தனியாக இருந்த 4 வயது சிறுவன் 4-year-old found with dead mom

By Battinews batticaloa → Thursday, March 28, 2013
இணையத்தில் இலவசமாக பேசி கொள்ள உதவும் ஸ்கைப், செய்திகளை பரிமாற கொள்ள உதவும் வாட்ஸ் அப் , வைபர்  (skype,viber,whatsup) போன்றவைகளுக்கு சவுதியில் தடை வரும் என தெரிகிறது.

 இது தொடர்பாக சவூதியின் தகவல் மற்றும் தொலை தொடர்பு ஆணையம் சம்பந்தப்பட்ட இணைய சேவை நிறுவங்களுக்கு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இச்சேவை தொடர முடியா பட்சத்தில் தடை விதிக்கப்படும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்கைப், வாட்ஸ அப் போன்ற அப்ளிகேஷன்ஸ் காரணத்தால் சவூதியின் தொலைபேசி நிறுவனங்களின் வருவாய் பாதிப்பால் தான் இம்முடிவு எடுக்கப்படுவதாக கூறுவதை மறுத்துள்ள சவூதி தொலை தொடர்பு ஆணையம் சவூதியின் பாதுகாப்பு கருதியே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. 2010ஆம் ஆண்டு ப்ளாக்பெர்ரி தொலைபேசி வழியாக அனுப்பப்படும் குறுந்தகவல்களை கண்காணிக்க முடியவில்லை என்றும் அதனால் தீவிரவாதத்திற்கு எதிரான தமது போரில் பின்னடைவு ஏற்படும்
என்றும் கூறி ப்ளாக்பெர்ரி போன்களுக்கு சவூதியில் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.co.uk/news/world-middle-east-21932432

சவூதியில் இலவசமாக பேசி கொள்ள உதவும் Skype, Viber க்கு தடை

By Battinews batticaloa →

4 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் இன்று நாடு திரும்பினார்.

1999 ஆண்டில் நவாஸ் ஷெரீப் அரசைக் கவிழ்த்துவிட்டு ஆட்சிக்கு வந்த முஷாரப், 2008ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வியைச் சந்தித்தார்.

இதைத் தொடர்ந்து, புதிய அரசு எச்சரிக்கை விடுத்ததையடுத்து, அவர் பாகிஸ்தானை விட்டு  வெளியேறி துபாயில் குடியேறினார்.


 இந்த நிலையில், மே மாதம் பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடப்பதையொட்டி இன்று நாடு திரும்புவதாக அவர் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

முஷாரப் நாடு திரும்பினால் சுட்டுக் கொல்வோம்  என்று தலிபான் தீவிரவாத இயக்கம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த எச்சரிக்கை மீறி  பர்வேஸ் முஷாரப் துபாயில் இருந்து இன்று பாகிஸ்தானுக்கு திரும்பினார்.

பாகிஸ்தானில் மே 11ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் பங்கேற்பதற்காக முஷாரப் 4 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பியுள்ளார்.

4 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் திரும்பினார் முஷாரப்

By Battinews batticaloa → Monday, March 25, 2013

90 வீதமான ஆளும் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு விலகவே விரும்புவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஆட்சியாளர்களின் சர்வாதிகார ஆட்சி முறைமையை ஆளும் கட்சியைச் சேர்ந்த பலர் விரும்பவில்லை. மாற்று அரசாங்கமொன்று அமைக்கப்படும் என உறுதியாள அறிவிக்கப்பட்டால் பலர் ஆளும் கட்சியை விட்டு விலகுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

90 வீதமான ஆளும் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு விலகவே விருப்பம்

By Battinews batticaloa → Sunday, March 24, 2013

ஐந்து குழந்தைகள் அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள பௌத்த குடும்பங்களுக்கு தாய்நாட்டை பாதுகாக்கும் சங்கத்தினால் 25 ஆயிரம் ரூபா வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இத்திட்டத்தை அமுல் படுத்தும் வகையில் ஐந்து பிள்ளைகள் இருக்கும் குடும்பங்களை அடையாளம் கானும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவ ஆனந்த தேரர் தெரிவித்தார்.

ஐந்து குழந்தைகளுக்கு மேல் உள்ள பௌத்த குடும்பங்களுக்கு 25000 ரூபா

By Battinews batticaloa →

பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் நில்லுங்கள் ராஜாவே 
Download here https://www.dropbox.com/s/2ojvwe0vwvgwnis/Nillunkal%20Rajave.pdf  

சுஜாதாவின் நில்லுங்கள் ராஜாவே - nillungal rajave download

By Battinews batticaloa → Saturday, March 23, 2013

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஹென்றி ஹோண்ட் (29). இவர் உலகிலேயே மிக நீளமான ஆடையை தயாரித்துள்ளார். கவுன் வடிவிலான அந்த ஆடை 1500 சதுர அடி அகலமும், 150 அடி நீளமும் கொண்டது. பட்டினால் தயாரிக்கப்பட்ட அந்த கவுனில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற புள்ளிகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆடை அறிமுக நிகழ்ச்சி லண்டனில் உள்ள டிரின்ட்டி லீட்ஸ் ஷாப்பிங் சென்டரில் நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் மத்தியல் ஒரு ராட்சத பரிசு பெட்டியில் இருந்து பிரபல மாடல் அழகி கோலெட் மார்ரோ தோன்றினார். அவர் ஹென்றி ஹேலண்ட் வடிவமைத்திருந்த அந்த கவுனை அணிந்து இருந்தார். அந்த ஆடை விழாவில் பங்கேற்ற அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.


இது குறித்து ஆடை வடிமைப்பாளர் ஹென்றி ஹோலண்டே கூறும்போது, 'பூச்சிகள் அவற்றின் சிறகுகளே இந்த ஆடை தயாரிக்க என்னை தூண்டின' என்றார்.
Tags:

உலகின் மிக நீளமான ஆடை ! World’s longest dress

By Battinews batticaloa →

ஸ்மார்ட்போன்களிலேயே அதிவேகமாக இயங்குவது சாம்சங் கடந்த வாரம் அறிமுகம் செய்த சாம்சங் கேலக்சி S4 ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் ஃபோன் என்று கிரீக்பென்ச் தயாரிப்பு நிறுவனமான பிரைமேட் லேப்ஸ் ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ளது.

ஆண்ட்ராய்ட் அதாரிட்டி தரநிலைகளின் அடிப்படையில் சாம்சங் கேலக்ஸி S4 ஸ்மார்ட் போனுக்கு இந்த அந்தஸ்து கிடைத்துள்ளது.

சாம்சங் கேலக்சி S4 ஸ்மார்ட் போன் , ஆப்பிள் ஐஃபோன் 5 மற்றும் பிற உபகரணங்களுடன் ஒப்புநோக்கப்பட்டதில் சாம்சங் கேலக்சி வெற்றி பெற்றது.

அட்டவணையில் சாம்சங் கேலக்சி S4 -ற்கு 3163 மார்க்குகள் கிடைத்துள்ளதால் முதலிடம் பெற்றது.

இந்த ஸ்மார்ட் போனின் குவாட் கோர் குவால்காம் புரோசசரே இதன் வேகத்திற்குக் காரணம் என்று ஆண்ட்ராய்ட் அத்தாரிட்டி தெரிவித்துள்ளது.

இதற்கு அடுத்தபடியான இடத்தில் சற்றும் எதிர்பாராத புதிய எச்டிசி ஒன் இருந்தது. இதற்கு கிடைத்த மதிப்பெண் 2,687.

சாம்சங்கிடம் தகராறு செய்து வரும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 5-ற்கு 1596 மதிப்பெண்களே கிடைத்ததோடு 5வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

6 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஒரிஜிடன் ஐபோன் அறிமுகம் செய்யப்பட்டபோது 130 மதிப்பெண்கள் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது..

அதிவேக ஸ்மார்ட்ஃபோன் samsung galaxy S4

By Battinews batticaloa → Thursday, March 21, 2013

அமெரிக்காவின் நியூயார்க் நகரை நோக்கி வந்து கொண்டிருக்கும் விண்கலை எப்படி சமாளிப்பது? என்பது குறித்து பிரதிநிதிகள் சபையின் அறிவியல் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாசா விண்வெளி அமைப்பின் தலைவர் சார்லஸ் போல்டன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் இதுதொடர்பாக நடந்த விவாதத்தில் பிரதிநிதிகள் மற்றும் விஞ்ஞானிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

நியூயார்க் நகரை நோக்கி வந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய விண்கல்லை எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். விண்கல்லை திசைதிருப்ப முயற்சி செய்ய வேண்டும். தேவைப்பட்டால் இதற்காக நீங்கள் பிரார்த்திக்க வேண்டும்.

பூமிக்கு அருகில் சுற்றிக்கொண்டிருக்கும் 95 சதவிகித விண்கற்களை நாசா கண்காணித்து வருகிறது. அதில் ஒரு கிலோ மீட்டர் விட்டமுடைய விண்கற்களும் அடங்கும். இந்த விண்கல்லானது மனித நாகரிகத்தை அழித்துவிடும் அபாயம் இருக்கிறது.

பூமியை நெருங்கும் மிகப்பெரிய விண்கல்: நாசா எச்சரிக்கை meteorite

By Battinews batticaloa →

பிரேசில் ரியோ டி ஜெனிரோவின் வடக்கு மலைப் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 300 மில்லிமீட்டர் அளவிலான மழை அங்கு கொட்டித்தீர்த்துள்ளது. இந்த பேய் மழைக்கு ஆற்றின் கரைகள் உடைந்து நகரின் பெட்ரோபோலீஸ் நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாயின.

மேலும், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் 50 வீடுகள் முழுமையாக இழுத்து செல்லப்பட்ட நிலையில் குறைந்தது 27 பேர் பலியாயினர். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 900 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேசிலில் நிலச்சரிவு: 27 பேர் பலி

By Battinews batticaloa →
வாடிகன் புனித பீட்டர் தேவாலயத்தில் இன்று காலை 9.30 மணிக்கு (இந்தியாவில் மதியம் 2 மணி) தொடங்கிய திருப்பலி வழிபாட்டில் போப் ஆண்டவராக பிரான்சிஸ் பதவியேற்றுக் கொண்டார். இதையொட்டி 115 கார்டினால்களும் பங்கேற்ற சிறப்பு வழிபாட்டில் பாரம்பரிய முறைப்படி, போப் பதவிக்கு உரிய மீனவரின் மோதிரமும், `பாலியம்' எனப்படும் கம்பளி கழுத்துப்பட்டையும் போப் பிரான்சிசுக்கு அணிவிக்கப்பட்டது. அதை 2 கார்டினல்கள் அணிவித்தனர். 

புதிய போப் ஆண்டவர் பிரான்சிஸ் பதவியேற்பு நிகழ்வு Inauguration of the new pope

By Battinews batticaloa → Wednesday, March 20, 2013
---