சுவிட்ஸர்லாந்தின் ஆர்பெர்க் பகுதியில், வெப்ப பலூன் மூலம் 8,000 மீட்டர் உயரத்துக்குச் சென்ற ரெமோ லாங் (38), அங்கிருந்து இறக்கை ஆடை (விங்சூட்) அணிந்து குதித்தார். இதற்காக அவர் ஆக்சிஜன் உபகரணத்தை பயன்படுத்தவில்லை. அவர் பத்திரமாகத் தரையிறங்கினார். இதன்மூலம் ஆக்சிஜன் உபகரணத்தின் உதவியின்றி அதிக உயரத்திலி ருந்து குதித்தவர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
ரெமோ லாங்கின் இச் சாதனைக்கு உதவி புரிந்தவர்கள் கூறுகையில், ‘‘குதிப்பதற்கு முன்பு சுமார் அரை மணி நேரம் ரெமோ லாங் இடைவிடாது ஆக்சிஜனை செறிவாகச் சுவாசித்தார்” எனத் தெரிவித்தனர்.
ரெமோ லாங்கின் இச் சாதனைக்கு உதவி புரிந்தவர்கள் கூறுகையில், ‘‘குதிப்பதற்கு முன்பு சுமார் அரை மணி நேரம் ரெமோ லாங் இடைவிடாது ஆக்சிஜனை செறிவாகச் சுவாசித்தார்” எனத் தெரிவித்தனர்.