மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த சத்யா நடேலா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் அதிபர் பில்கேட்ஸ் தனது பதவியை இன்று இராஜினாமா செய்தார்.
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கடமையாற்றிய ஸ்டீவ் போல்மர் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து அப்பதவிக்குப் பொருத்தமானவரை தெரிவு செய்யும் பொருட்டு சிறப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
இந்தக் குழு தெரிவு செய்திருந்தவர்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த சத்யா நடேலாவும் உள்ளடக்கப்பட்டிருந்தார்.
அவரையே புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்திருப்பதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள பில்கேட்ஸ் அந்நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகராக தன் பணியை தொடர உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.