Bangladesh had yet another day of bloodshed on Sunday, as at least 19 people died in angry skirmishes between the police and supporters of the country’s biggest Islamist political party. The supporters were protesting the recent convictions of their leaders by a special tribunal prosecuting accused war criminals from the country’s 1971 struggle for liberation.

பங்களாதேஷில் மீண்டும் நிகழ்ந்த கலவரத்தில் 21 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பங்களாதேஷ் கலவரங்களுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.

1971இல் நடந்த பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்திற்கு எதிராக செயல்பட்ட ஜமாத் ஈ இஸ்லாமி கட்சியின் முக்கிய தலைவர்கள் 3 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தண்டனை அறிவித்ததை அடுத்து, தற்போது அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கலவரம் வெடித்தது.

தண்டனையை எதிர்த்து 2 நாட்கள் முழு அடைப்புக்கு ஜமாத் ஈ இஸ்லாமி கட்சி அழைப்பு விடுத்திருந்தது. முழு அடைப்பு காரணமாக அக்கட்சியினர் பல்வேறு இடங்களில் கலவரங்களில் ஈடுபட்டனர். தெற்கு பங்களாதேஷில் காவல் நிலையம் மீது ஜமாத் ஈ இஸ்லாமி கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.

ராணுவ வீரர்களுடனும் அவர்கள் மோதலில் ஈடுபட்டனர். துப்பாக்கியால் சுட்டும், குண்டுகள் வீசியும் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் போலீஸார் உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.