மனித மூளையை ஆன் லைனில் விற்ற இளைஞர் கைது

By Battinews → Sunday, January 5, 2014
அமெரிக்காவில் ஆன் லைன் மூலம் மனித மூளை உட்பட திசுக்களை விற்ற குற்றத்திற்காக 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இண்டியானா போலிஸ் மாகாணத்தை சேர்ந்த டேவிட் சார்லஸ் என்ற 21 வயது நபரை போலீசார் ஆன் லைனில் "ஈ பே" மூலம் மனித மூளையை விற்றதாக கூறி கைது செய்தனர்
அங்குள்ள இண்டியானா மருத்துவ வரலாற்று அருங்காட்சியகத்தில் 2013 ஆம் ஆண்டு ஆறு முறை திருடிய இந்த நபர், மனித மூளை உட்பட பலவகையான திசுக்களை திருடியுள்ளார்.

அந்த அருங்காட்சியகத்தில் 2000 நோயாளிகளின் உடல் உறுப்புகள் உள்ளதாகவும், அவை அனைத்தும் 1890 முதல் 1940 வரையான காலத்திற்கு உட்பட்டவை என்றும் கூறப்படுகிறது.

ஜார்களில் வைக்கப்பட்டிருந்த இம்மூளைத் திசுக்களை "ஈ பே" இணையதளம் மூலம் டேவிட் சார்லஸ் விற்றுள்ளார்.

இந்நிலையில், சார்லஸிடம் 6 மூளைகளை 670 டாலர்களுக்கு வாங்கிய நபர் ஒருவர் அவை அருங்காட்சியகத்திலிருந்து எடுக்கப்பட்டது எனத் தெரிந்தவுடன் உடனடியாக இண்டியானா போலிஸ் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து டேவிட் சார்லஸை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.