சிலி நாட்டில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7 புள்ளிகளாக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனையடுத்து மீண்டும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று (புதன் கிழமை) 8.2 ரிக்டர் அளவு நில நடுக்கமும், அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. இதில், 6 பேர் உயிரிழந்தனர்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 17 அதிர்வுகள் குறிப்பிட்ட இடைவெளியில் ஏற்பட்டன என சிலி அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சில அதிர்வுகள் சில நாட்களுக்கு இருக்கும் என சிலி பல்கலைக்கழக நில அதிர்வுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது