காணாமல் போன மலேசிய விமானம் உலகம் முழுவதையும் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்க, முன் சக்கரங்களே இல்லாமல் தரையிறங்கிய விமானம் பிரேசில் நாட்டு மக்களை கதிகலங்க வைத்துள்ளது.
பிரேசில் நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் விமானப் போக்கு வரத்து நிறுவனம் ஏவியன்கா பிரேசில் என்பதாகும். உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் இது முக்கியப் பங்காற்றி வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை பிரேசில் நாட்டில் உள்ள பெட்ரோலினா எனும் நகரில் இருந்து நாட்டின் தலைநகரமான பிரேசிலியாவுக்கு 44 பயணிகள் மற்றும் விமானி உள்ளிட்ட ஐந்து ஊழியர்களுடன் ஏவியன்கா பிரேசிலின் போக்கர் 100 விமானம் வந்துகொண்டிருந்தது. பிரேசிலியாவில் விமானத்தைத் தரையிறக்கும்போது திடீரென கோளாறு ஏற்பட்டதால் விமானத்தின் முன் சக்கரங்கள் இயங்கவில்லை.
உடனே விமானி, வேகத்தைக் கட்டுப்படுத்தி பின் சக்கரங்களைக் கொண்டு விமானத்தைத் தரையிறக் கினார். இதனால் விமானத்தில் தீப்பற்றிக் கொண்டது. எனினும் தீயணைப்பு வீரர்கள் தயாராக இருந்ததால் உடனடியாக தீ அணைக்கப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக பயணிக ளுக்கு காயம் ஏற்படவில்லை. அவசரகால அடிப்படையில் விமானம் தரையிறங்கியதால் நாட்டின் நான்காவது பெரிய விமான நிலையமான பிரேசிலியா விமான நிலையத்தில் இரண்டு ஓடுபாதைகள் மூடப்பட்டன. இதனால் மற்ற விமானங்கள் வந்து செல்வதில் தாமதம் ஏற்பட்டது.