Browsing "Older Posts"

Browsing Category "islam"

முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாய் நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்திருப்பதாகக் கூறிவிஸ்வரூபம் திரைப்படத்தை கண்டித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு மருதானை சினிசிட்டி திரையரங்கை முற்றுகையிடுவதாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் முடிவெடுத்துள்ளது.

இது தொடர்பாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,

தொடர்ச்சியாக சினிமாக்கள் மூலம் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமான கருத்துக்களை வெளியிட்டு வரும் கமல்ஹாசன் இம்முறையும் விஸ்வரூபம் திரைப்படம் மூலமாக தனது இஸ்லாமிய எதிர்ப்புத் துவேசத்தைக் காட்டுவதின் மூலம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், ஒழுக்கம் கெட்டவர்களாகவும், சித்தரித்துள்ளதுடன் முஸ்லிம்கள் புனிதமாக கருதும் திருமறைக் குர்ஆனையும் கொச்சைப்படுத்தி இத் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

21ம் தேதி திங்கள் கிழமை தமிழ்நாட்டில் இயங்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்கு இத்திரைப்படம் திரையிட்டுக் காட்டப்பட்டது. விஸ்வரூபம் திரைப்படத்தின் காட்சிகள் தமிழ் சினிமா வரலாற்றில் இது வரைக்கும் எந்தத் திரைப்படத்திலும் இல்லாத அளவு இஸ்லாத்தையும், முஸ்லிம்களும் கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தின் பலம் மிகு இஸ்லாமிய அமைப்பான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவித்துள்ளதுடன், இந்தியாவில் எந்தவொரு திரையரங்கிளும் இத்திரைப்படத்தை ஓட விடமாட்டோம் என்றும் அறிவித்துள்ளது.

இலங்கையிலும் இத்திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் இலங்கை திரைப்பட வெளியீட்டுக் கூட்டுத்தாபனத்திற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டதுடன், ஜனாதிபதி மற்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோருக்கும் இத்திரைப்படத்தை தடை செய்யும்படி கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 25ம் திகதி விஸ்வரூபம் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் இலங்கையில் கொழும்பு மருதானை சினிசிட்டி திரையரங்கிலும் இத்திரைப்படம் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(25-01-2013) ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக சினிசிட்டி திரையரங்கை முற்றுகையிடுவதாக இன்று நடந்த ஜமாத்தின் தலைமை நிர்வாக கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் விஸ்வரூபம் திரைப்படத்துக்கு எதிராக முஸ்லிம்கள் போராட்டம்

By Battinews → Wednesday, January 23, 2013

பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தை ஒட்டியுள்ள சீட்டா கிராமத்தில் உள்ள மசூதி ஒன்றில், கடந்த வியாழக்கிழமை ஒரு வழிப்போக்கர் இரவு தங்கினார். மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை, அந்த மசூதியின் மதகுரு தொழுகை நடத்த வந்தபோது, எரிந்த நிலையில் குர்ஆனின் ஏடுகள் கிடந்தன.

இதனையொட்டி, அந்த மசூதியில் வழிப்போக்கர் மட்டுமே தங்கியிருந்ததால், குர்ஆனை அவர் தான் எரித்து இருக்க வேண்டும் என மதகுரு தீர்மானித்தார். மத அவமதிப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கும்படி அந்த வழிப்போக்கரை போலீசாரிடம் மதகுரு ஒப்படைத்தார்.

இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட அந்த கிராமத்தைச் சேர்ந்த சுமார் 200 பேர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். போலீசாரின் காவலில் இருந்து அந்த வழிப்போக்கரை விடுவித்து, வெளியே இழுத்துப்போட்ட அந்த கும்பல், அவரை உயிருடன் தீ வைத்து எரித்துக் கொன்றது.

இந்த சம்பவம் தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், பணியின் போது கவனக்குறைவாக இருந்த குற்றச்சாட்டின் கீழ் 7 போலீசாரை கைது செய்துள்ளதாகவும் டாடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் தெரிவித்தார்.

குர்ஆனை அவமதித்த நபர் உயிருடன் எரித்துக் கொலை

By Battinews → Sunday, December 23, 2012
அமெரிக்காவில் இருந்து வெளியிடப்பட்ட திரைப்படம் நபிகள் நாயகத்தை அவமதிப்பதாக உள்ளது என்று உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இந்த சர்ச்சைக்குரிய திரைப்படத்தை வெளியிட்ட அமெரிக்காவைக் கண்டித்து லிபியா, பாகிஸ்தான், எகிப்து போன்ற நாடுகளில் பெரும் போராட்டங்கள் வெடித்தன. அமெரிக்க தூதரகங்கள் தாக்கப்பட்டன. இதற்கிடையே இந்த திரைப்படத்தை தயாரித்தவரை கொல்பவருக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலரை நான் பரிசாகத் தருவேன் என்று பாகிஸ்தான் மந்திரி அறிவித்தார். அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்ததால், சர்ச்சைக்குரிய படத்தை தயாரித்தவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அந்த படத்தை தயாரித்த நகோலா(55) என்பவரை கலிபோர்னியா போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமீனும் வழங்கப்படவில்லை. இதற்கு முன் நகோலா தனது பெயரை பலமுறை மாற்றி, பல்வேறு பெயர்களில் கிரெடிட் கார்டுகள் பெற்று முறைகேடு செய்துள்ளார். போலியான வங்கிக் கணக்கு தொடங்கி பல்லாயிரக்கணக்கான டாலர் கடன் பெற்றுள்ளார். இதுதொடர்பாக கடந்த 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நகோலா, 2011ல் விடுதலை ஆனது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியர்களுக்கு எதிராக திரைப்படம் தயாரித்தவர் கைது

By Battinews → Friday, September 28, 2012

யூ டியூப்பில் இருந்து சர்ச்சைக்குரிய படத்தின் வீடியோவை நீக்குமாறு அமெரிக்கா விடுத்த வேண்டுகோளை கூகுள் நிறுவனம் நிராகரித்துள்ளது.
இந்தப் படத்தின் சில பகுதிகள் யூ டியூப்பில் வெளியானதையடுத்து எகிப்து, லிபியாவில் பயங்கர கலவரம் வெடித்து மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதில் லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் கொல்லப்பட்டுள்ளார்.
இந் நிலையில் இந்த வீடியோவை நீக்குமாறு அமெரிக்க அரசு விடுத்த வேண்டுகோளை கூகுள் நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கூகுள் இணைய தள நிறுவனம், எகிப்து மற்றும் லிபியாவில் அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து அந்நாடுகளில் யூ டியூப் வீடியோ காட்சிகள் தடை செய்யப்பட்டன. பின்னர் அந்த வீடியோ காட்சிகளை இந்தியா மற்றும் இந்தோனேசியாவிலும் தடை செய்திருக்கிறோம்.

தற்போது பதிவேற்றப்பட்டிருக்கும் காட்சிகள் எமது நிறுவன நிபந்தனைகளுக்குட்பட்டதுதான் என்று கூறியுள்ளது.

சர்ச்சைக்குரிய திரைப் படத்தின் வீடியோவை நீக்க அமெரிக்கா வேண்டுகோள்- கூகுள் நிராகரிப்பு

By Battinews → Sunday, September 16, 2012
உலகிலேயே மிகப்பெரிய குர்ஆன் ரஷியாவில் கஷான் நகரில் உள்ள குவாயிஸ் ஹாரிப் மசூதியில் உள்ளது. இது ஸ்காட்லாந்து பேப்பரில் அச்சிடப்பட்டுள்ளது.

150 செ.மீட்டர் நீளமும், 200 செ.மீட்டர் அகலமும் உடைய இந்த குர்ஆன் 632 பக்கங் களை கொண்டது. இது 800 கிலோ எடை உடையது. இந்த குர்ஆன் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக கடார்ஸ்டான் மாகாண கவுன்சிலர் மின்டி டன் ஷாய் மெயேவ் தெரிவித்துள்ளார்.

உலகிலேயே மிகப்பெரிய குர்ஆன் ரஷியாவில்

By Battinews → Friday, February 24, 2012