யூ டியூப்பில் இருந்து சர்ச்சைக்குரிய படத்தின் வீடியோவை நீக்குமாறு அமெரிக்கா விடுத்த வேண்டுகோளை கூகுள் நிறுவனம் நிராகரித்துள்ளது.
இந்தப் படத்தின் சில பகுதிகள் யூ டியூப்பில் வெளியானதையடுத்து எகிப்து, லிபியாவில் பயங்கர கலவரம் வெடித்து மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதில் லிபியாவுக்கான அமெரிக்கத் தூதர் கொல்லப்பட்டுள்ளார்.
இந் நிலையில் இந்த வீடியோவை நீக்குமாறு அமெரிக்க அரசு விடுத்த வேண்டுகோளை கூகுள் நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கூகுள் இணைய தள நிறுவனம், எகிப்து மற்றும் லிபியாவில் அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து அந்நாடுகளில் யூ டியூப் வீடியோ காட்சிகள் தடை செய்யப்பட்டன. பின்னர் அந்த வீடியோ காட்சிகளை இந்தியா மற்றும் இந்தோனேசியாவிலும் தடை செய்திருக்கிறோம்.

தற்போது பதிவேற்றப்பட்டிருக்கும் காட்சிகள் எமது நிறுவன நிபந்தனைகளுக்குட்பட்டதுதான் என்று கூறியுள்ளது.