
இவர் பெற்று இருக்கும் மதிப்பெண்ணே இந்த தேர்வில் பெறக்கூடிய அதிக மதிப்பெண்ணாகும். இதன் மூலம் இவர் பில்கேட்ஸ், ஸ்டீபன் ஹாகிங், ஐன்ஸ்டீன் போன்றோரைவிட அதிக நுண்ணறிவு கொண்டவர் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் அனைவரும் 160 மதிப்பெண்களே பெற்று இருந்தார்கள்.
நேஹா ஏழு வயதாக இருந்தபோது, மருத்துவர்களான அவர்களது பெற்றோர் இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தனர்.
நேஹாவின் அம்மா கூறுகையில், "எங்களுக்கு நேஹா இவ்வளவு திறமையானவள் என்பது முதலில் தெரியவில்லை. எப்பொழுதுமே பள்ளியில் நன்றாக படிக்கும் இவள், மென்சா தேர்வில் பதினெட்டு வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் தலைசிறந்த மதிப்பெண் பெற்று இருப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது. எங்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை" என்றார்.
உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் சேர இந்த மதிப்பெண் போதுமானது. இதை சிறிய வயதிலேயே சாதித்து இருக்கிறார் நேஹா ராமு.