கணனியின் மவுஸ் அளவே உள்ள ஸ்கேனிங் கருவியை கண்டுபிடித்துள்ளார் இங்கிலாந்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவர்.
இங்கிலாந்தில் உள்ள நியூகேசில் பல்கலையின் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் ஜெப் நீஷம்.
இவரது தலைமையிலான குழு மலிவு விலை ஸ்கேனிங் கருவியை உருவாக்கியுள்ளது.
இதுபற்றி அவர் கூறுகையில், வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள ஸ்கேன் எடுக்கும் நடைமுறை உலகம் முழுவதும் இருக்கிறது.
பொதுவாக, ஸ்கேனர் விலை ரூ.20 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இருக்கிறது. விலை அதிகம் என்பதால் கட்டணமும் அதிகம் வசூலிக்கிறார்கள்.
சிம்பிளாக நாமே ஒரு ஸ்கேனர் தயாரித்தால் என்ன என்ற எண்ணம், என் மனைவி முதன்முதலாக கர்ப்பமானபோது உதித்தது.
ஒலி அலைகள் தொடர்பான சோனார் துறையில் எனக்கு இருந்த அறிவும் அனுபவமும் கைகொடுத்தது.
உடனடியாக அசெம்பிள் செய்து மினி ஸ்கேனரை உருவாக்கினேன். அதன் உதவியுடன் குழந்தையை ஸ்கேன் செய்து நானும் மனைவியும் டிவி திரையில் பார்த்து மகிழ்ந்தோம்.
சக ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து அதில் சில மாற்றங்கள் செய்து மலிவு விலை ஸ்கேனரை உருவாக்கியுள்ளேன். இதை தயாரிக்க அதிகபட்சம் ரூ.3,500தான் செலவானது. கம்ப்யூட்டர் மவுஸ் சைஸ் மட்டுமே உள்ளது.
யுஎஸ்பி போர்ட் மூலம் கணனி அல்லது மடிக்கணனியில் இணைத்தால் குழந்தையின் அசைவை ஸ்கிரீனில் பார்க்கலாம்.
ஆணா, பெண்ணா என்பதை தெரிந்துகொள்ளும் அளவுக்கு தெளிவாக இல்லை. அதிக விலை ஸ்கேனர் கருவிக்கு நிகராக இதன் தரத்தை மேம்படுத்த முயற்சி செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.