
சவூதி அரேபியாவில் மக்கா-தாயிப் நெஞ்சாலையில் வாகனமொன்றில் பயணித்துக் கொண்டிருந்த சமயமே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ் விபத்தில் பம்பஹாஸ்யால ஆச்சிலாகே பத்மா ரஞ்சனி (55), சமரகோன் முதியான்சலாகே சோமலதா (56) மற்றும் ஹசீனா உம்மா அப்துல் ஹமீத் (52) ஆகியவர்களே உயிரிழந்தவர்களாவர்.
இந்நிலையில் வாகனத்தை செலுத்திய வங்காளதேசத்தைச் சேர்ந்த சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஹசீனா என்பவரது உடல் சவூதியில் நல்லடக்கம் செய்யப்பட்டதாகவும் மற்றைய இரு சடலங்களும் இலங்கைக்கு எடுத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.