கையடக்கத் தொலைபேசி கொள்வனவு செய்யும் போது அதன் தரம் குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டும் என தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைகுழு குறிப்பிட்டுள்ளது.
தரமற்ற கையடக்கத் தொலைபேசிகள் பல சட்டவிரோமாக சந்தைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதனை தடுக்க தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைகுழு வசமுள்ள அதிகாரம் வரையருக்கப்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் அவதானமாக இருந்தால் தரக்குறைவான கையடக்கத் தொலைபேசி வியாபாரத்தை தடுக்க முடியும் என தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைகுழு தெரிவித்துள்ளது.
கையடக்கத் தொலைபேசி கொள்வனவு செய்யும் போது அதன் தரத்தை அறியும் முறை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைகுழு வசமுள்ளது.
தொலைபேசியின் எமி இலக்கத்தை 1909 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் அனுப்புவதன் மூலம் அந்த கையடக்கத் தொலைபேசியின் தரம் குறித்து அறிந்து கொள்ள முடியும் என தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைகுழு அறிவித்துள்ளது.