லண்டனில் 30-வது ஒலிம்பிக் போட்டிகள் இன்று கோலாகலமாக தொடங்கியது. கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற வேளையில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு அடையாளமாக ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.

கடந்த 70 நாட்களாக உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஒலிம்பிக் தீப ஓட்டம் லண்டனில் நிறைவு பெற்றது. பயணத்தின் இறுதியாக துவக்க விழா நடைபெறும் மைதானத்திற்கு ஒலிம்பிக் தீபம் கொண்டு வரப்பட்டு அங்கு பிரம்மாண்ட தீபம் ஏற்றப்பட்டது.

இந்த பயணத்தின் போது 13 மில்லியன் மக்கள் சாலைகளின் இரு பக்கத்திலும் நின்று தங்களது ஆதரவை உற்சாகத்துடன் தெரிவித்தனர் . ஒலிம்பிக் தீபம் தேம்ஸ் நதியில் அலங்கரிக்கப்பட்ட படகில் இன்று வலம் வந்தது. இந்த படகில் உலக தரத்தில் முன்னணியில் இருக்கும் படகு போட்டி வீரர்கள் எடுத்து வந்தனர்.

இந்த தீபம் சிட்டி ஹால் என்கிற இடத்திற்கு வந்த வரை பொது மக்கள் இந்த பயணத்தை கண்டு களித்தனர். பின்னர் போட்டி துவங்கியதன் அடையாளமாக பெரிய தீபம் ஏற்றப்பட்டது. இந்த ஒலிம்பிக் தீபம் போட்டிகள் முடிவடையும் வரை எரிந்து கொண்டிருக்கும். போட்டிகள் முடிவடையும் இறுதி நாளில் நிறைவு விழாவின்போது அணைக்கப்படும்

Post Tags: