Browsing "Older Posts"

Browsing Category "video"
புதிய போப்பாக அர்ஜென்டினா பியுனோஸ் ஏரிஸ் நகரின் ஆர்ச் பிஷப் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். லத்தீன் அமெரிக்காவிலிருந்து தேர்வு செய்யப்படும் முதல் போப் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய போப்பாக ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ தேர்வு The New Pope

By Battinews → Thursday, March 14, 2013

டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பலத்த காயமுற்று இருந்த மாணவி 13நாள் உயிருக்கு போராடி வந்தார், தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் உடலில் முக்கிய உறுப்புகள், மூளை செயல் இழந்ததை அடுத்து மாணவி உயிரிழந்தார். இந்திய நேரப்படி அதிகாலை 2.15 மணிக்கு 23வயது மாணவியின் உயிர் பிரிந்தது.

மாணவியை தாக்கிய கும்பல்

டெல்லியில் கடந்த 16ம் தேதி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டார். மாணவியை தாக்கிய அந்த கொடூர கும்பல் பலாத்காரம் செய்த பிறகு பேருந்தில் இருந்து தூக்கி வீசியது. மருத்துவ மாணவியுடன் வந்த ஆண் நண்பரையும் அந்த கும்பல் தாக்கியது. கடுமையாக தாக்கப்பட்ட அம்மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் சிகிச்சையால் அம்மாணவியின் உடலில் எந்தவித முன்னேற்றமுமு இல்லாமல் மேலும் மோசமடைந்தது. இதனையடுத்து கடந்த 26ம் தேதி சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மாணவி உயிரிழந்துள்ளார்.

இந்திய தூதரகம் தகவல்

உயிரிழந்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் இந்தியா எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. மாணவி உடலை காலம் தாழ்த்தாமல் இந்தியா எடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

டெல்லியில் பலத்த பாதுகாப்பு

மாணவி உயிரி-ழந்ததை தொடர்ந்து டெல்லி நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லி நகரின் முக்கிய சாலைகளில் அதிரடிப் படை போலீஸ் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா கேட் பகுதியில் அனைத்து நுழைவு வாயில்களிலும் தடுப்பு வேலி போடப்பட்டுள்ளது. மக்கள் அமைதி காக்குமாறு போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.

பலாத்காரம் செய்யப்பட்ட டெல்லி மாணவி உயிரிழந்தார்

By Battinews → Saturday, December 29, 2012

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கடும் உறைபணி பெய்து வருகின்றது. மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் சீதோஷ்ண நிலை அங்கு நிலவுகின்றது. இந்த உறைபனிக்கு கடந்த ஒரு வாரத்தில் 56 பேர் பலியாகியுள்ளதாகவும், 371 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா , கிழக்கு ஐரோப்பாவில் கடும் பனியால் 200 பேர் பலி

By Battinews → Sunday, December 23, 2012
எகிப்து விமானத்தில் திடீரென பாம்பு நுழைந்ததால், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.எகிப்து நாட்டின் கெய்ரோவிலிருந்து, குவைத் நோக்கி, விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் பயணித்த ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த, பாம்பு வியாபாரி, எகிப்தில் வாங்கிய நாகப்பாம்பை, கள்ளத்தனமாக எடுத்து வந்தார். திடீரென இந்த பாம்பு, 48 வயதான அந்த நபரை கடித்து விட்டது. இதனால், அவர் கையை உதறிய போது, அந்த பாம்பு அவரிடமிருந்து தப்பித்து, விமானத்தின் மற்ற இருக்கைகள் வழியாக சென்று விட்டது.இந்த பாம்பை அவர் பிடிக்க முயன்ற போது, விமான ஊழியர்கள் உஷாரடைந்து விட்டனர். ஆனால், பயணிகள் பீதியடைந்து அலறினர். இதையடுத்து, விமானம் உடனடியாக, அல் கர்தாகா நகரில் தரையிறக்கப் பட்டது.விமானத்தில் சுற்றிக் கொண்டிருந்த பாம்பு பிடிக்கப்பட்டது. ஆனால், இந்த வியாபாரி, பாம்பு கடிக்கு சிகிச்சை பெறுவது மூடத்தனம் எனக் கூறி மருத்துவமனைக்கு வர மறுத்தார். ஆனால், பின்னர் கட்டாயப்படுத்தி அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

விமானத்தில் திடீரென பாம்பு நுழைந்ததால் விமானம் அவசரமாக தரையிறக்கம்

By Battinews → Friday, December 7, 2012
அமெரிக்காவிற்கு சிறப்பான மாற்றம் வர உள்ளது என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார். இதனை தொடர்ந்து உலகம் முழுவதிலும் இருந்து ஒபாமாவிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் ரோம்னி தனது தோல்வியை ஓப்புக்கொண்டார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் ஒபாமாவை தொடர்பு கொண்ட மிட் ரோமினி, அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். ஒபாமாவிடம் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.


பத்திரிகையாளர்களிடம் ரோம்னி கூறுகையில்,மக்கள் தங்கள் தலைவரை தேர்ந்தெடுத்துள்ளார்கள். அவருக்காக நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். என்னுடன் கடுமையாக உழைத்தவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அமெரிக்கா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களை ஒபாமா சமாளிப்பார் என நம்புகிறேன். அமெரிக்கா மீது கொண்ட அக்கறை காரணமாக நான் தேர்தலில் போட்டியிட்டேன். இந்த நேரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை என கூறினார்.

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஒபாமா, சிகாகோ நகரில் உரையாற்றினார்

அவர் பேசுகையில் வெற்றி உங்களால் தான் கிடைத்தது. எனது வெற்றி அமெரிக்க மக்களின் வெற்றி. நாம் ஒற்றுமையாக இருந்து நாட்டை முன்னெடுத்துசெல்வோம்.என்னை முன்னேற்றியதற்காகவும் என் மீது நம்பிக்கை வைத்ததற்காகவும் உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எனது மனைவி இல்லாமல் நான் உயர்ந்திருக்க முடியாது. அமெரிக்காவிற்கு சிறப்பான மாற்றம் வர உள்ளது.நாம் அனைவரும் அமெரிக்க குடும்பங்கள். முன்னேறுவதிலும் வீழ்வதிலும் ஒற்றுமையாக இருப்போம்.கவர்னர் ரோம்னிக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். அவருடன் இணைந்து செயல்பட்டு நாட்டை முன்னேற்றுவது குறித்து ரோம்னியுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். ரோம்னியுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும், ஒரே எண்ணம் உள்ளது. மற்ற நாடுகளை விட அமெரிக்கா வளமானது. குடியரசு கட்சியுடன் இணைந்து பணியாற்றி நிதி நெருக்கடியை சமாளிப்போம் இந்த முறை போட்டி கடுமையாக இருந்தது. அமெரிக்க ராணுவம் சிறந்தது. தேர்தல் பிரசாரத்தில் வலிமையான குழு ஈடுபட்டது. அமெரிக்க குழந்தைகள் கடன்கள் இல்லாத எதிர்காலத்தில் வாழ வேண்டும். பல்வேறு சிரமங்களுக்கு இடையே தான் நாம் உயர முடியும்.முன்னேற்றப்பாதையை நோக்கி முன்னேறி செல்வோம். இனி வரும் காலங்களில் நிறைய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். நடுத்தர வர்க்கத்தினருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என கூறினார்.

அமெரிக்காவிற்கு சிறப்பான மாற்றம் வர உள்ளது: சிகாகோவில் ஒபாமா வெற்றி உரை

By Battinews → Thursday, November 8, 2012

China Tea Tamil Short Film -

By Battinews → Wednesday, November 7, 2012
அமெரிக்காவில் நடந்த, கரப்பான் பூச்சி சாப்பிடும் போட்டியில், வெற்றி பெற்ற வாலிபர், சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து இறந்தார். அமெரிக்காவின், புளோரிடா மாகாணத்தின், டீர்பீல்டு பீச் பகுதியில், பாம்பு விற்கும் கடையில் வினோதமான போட்டி, 5ம் தேதி நடத்தப்பட்டது. கரப்பான் பூச்சி, புழு உள்ளிட்டவற்றை சாப்பிடும் போட்டியில், 30க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில், வெற்றி பெறுபவர்களுக்கு மலைப்பாம்பு, பரிசாக அறிவிக்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற எட்வர்டு ஆர்ச்போல்டு, 32, என்பவர் சகட்டுமேனிக்கு, கரப்பான் பூச்சிகளை எடுத்து வாயில் திணித்து சாப்பிட்டார். அதிக கரப்பான் பூச்சிகளையும், புழுக்களையும், குறுகிய நேரத்தில், விரைவில் சாப்பிட்டதற்காக இவருக்கு மலைப்பாம்பு பரிசாக வழங்கப்பட்டது. இந்த பாம்பை, நண்பர்களுக்கு அளிக்கப்போவதாகக் கூறிய எட்வர்டு, சிறிது நேரத்தில் வயிறு வலியால் துடித்தார். அதை தொடர்ந்து, மயங்கி விழுந்தார். உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் இறந்து விட்டார். "பின்விளைவுகளை ஏற்பதாகக் கூறி, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின் தான், போட்டியில் பங்கேற்க போட்டியாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். எனினும், எட்வர்டு இறந்து விட்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது' என பாம்பு வியாபாரி, பென்சீகல் தெரிவித்துள்ளார்.

கரப்பான் பூச்சி உண்ணும் போட்டியில் வெற்றி பெற்றவர் திடீர் மரணம்-Video

By Battinews → Friday, October 12, 2012