
ரஷ்யாவின் ஐரோப்பிய பகுதிகளில் ஒன்றான உக்ரைனில் பெய்துவரும் உறைபனிக்கு 83 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் 57 பேரின் பிரேதங்கள் சாலையோரம் கிடந்தன. இவர்கள் அனைவரும் வீடுகளின்றி சாலையோரம் வசித்து வந்த ஏழை மக்கள் என கூறப்படுகின்றது.
மைனஸ் 15 டிகிரி செல்சியஸ் பனி இங்கு பெய்து வருகின்றது. 526 பேர் கடும் குளிரினால் பாதிக்கப்பட்டதால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேபோல், கிழக்கு ஐரோப்பிய பகுதியான போலாந்தில், மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உறைபனி பெய்கின்றது. இப்பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் 49 பேர் குளிர் தாங்காமல் பலியாகியுள்ளனர். இவர்களிலும் பெரும்பாலானவர்கள் வசிக்க வீடில்லாத ஏழைகள் என கூறப்படுகின்றது.