அமெரிக்காவைச் சேர்ந்த மிஸ்டி வான்ஹார்ன் என்னும் 22 வயது பெண் ஃபேஸ்புக் மூலம் தனது குழந்தைகளை விற்க முயற்சித்ததால் கைது செய்யப்பட்டார். விசாரணையில், தனது காதலனை ஜாமீனில் எடுக்க பணம் தேவைப்பட்டதால் குழந்தைகளை விற்க முயன்றது தெரியவந்துள்ளது.
குழந்தைகள் விற்பனைக்கு இருப்பதாக ஃபேஸ்புக்கில் தொடர்ந்து அறிவித்துக்கொண்டு இருந்த அந்தப் பெண், பத்து மாத பெண் குழந்தையை மட்டும் பெற்றால் ஐம்பதாயிரம் ரூபாய், இரண்டு வயது குழந்தையுடன் சேர்த்து பெற்றுக்கொண்டால் இரண்டு லட்சம் என்று அறிவித்தார்.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு பயணிக்க முயற்சித்த 45 பேர் மாறவில பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தமக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இன்று அதிகாலை 2 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இந்தக் குழுவினர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
புத்தளம், கருவலகஸ்வெள பகுதியில் பௌத்த பிக்கு ஒருவர் வீடொன்றில் பெண்ணொருவருடன் உல்லாசமாக இருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் போது குறித்த பௌத்த பிக்கு அதிக குடிபோதையில் இருந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
நார்வே நாட்டில், மகனை கண்டித்த, இந்திய பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஐதராபாத்தை சேர்ந்தவர் சந்திரசேகர்; நார்வே நாட்டில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிகிறார். இவரது மனைவி அனுபமா. இவர்களது ஏழு வயது மகன், ஆஸ்லோ நகர் பள்ளியில் படிக்கிறான்.
சமீபத்தில் இவர்களது மகன், பள்ளியில், பேன்ட்டிலேயே, சிறுநீர் கழித்து ஈரமாக்கிக் கொண்டான். இதற்காக சந்திரசேகர், மகனை கண்டித்துள்ளார். மறுநாள், பள்ளியிலிருந்து ஒரு பொம்மையை எடுத்து வந்து விட்டான். இதனால் கோபமடைந்த சந்திரசேகர், இது போன்று செய்தால், உன்னை, ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பி விடுவேன் என, மிரட்டியுள்ளார்.