மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலைநகர் மாலேயிலுள்ள அவரின் வீட்டில் வைத்து மொஹமட் நஷீட் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.
நாளைய தினம் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரை கைது செய்யுமாறு மூன்றாவது முறையாக கீழ் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில், நஷீட் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இரண்டு முறை பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் அரசியல் தஞ்சமடைந்திருந்தார்.
ஜனாதிபதியாக பதவிவகித்த காலப் பகுதியில் சிரேஷ்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதியை தடுத்து வைத்ததாக அவர் மீது குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது.