வட நைஜீரியாவில் உள்ள கானோ நகர் பஸ் நிலையத்தில் இன்று நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 25 பேர் பலியாகினர். நைஜீரியாவின் தென் பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் புறப்பட தயாரான போது இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த பயணி ஒருவர் தெரிவித்தார்.

படுகாயமடைந்த பலர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை. எனினும், கானோ நகரின் மீது போக்கோ ஹரம் தீவிரவாதிகள் ஏற்கனவே பலமுறை தாக்குதல்களை நடத்தியுள்ளதால், இச்சம்பவத்திற்கும் அவர்கள் தான் காரணமாக இருக்க வேண்டும் என விசாரணை அதிகாரி ஒருவர் கூறினார்.