இஸ்லாமிய நாடுகளை உள்ளடக்கிய இஸ்லாமிய  கூட்டுறவு நாடுகளின் மாநாடு எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க ஈரான் அதிபர் அஹமதினெஜாத் கெய்ரோ வந்துள்ளார்.

எகிப்து அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சிக்கு நேற்று பேட்டியளித்த அஹமதினெஜாத் கூறியதாவது:-

ஈரான் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடவும், ஈரான் மீது தாக்குதல் நடத்தவும் இஸ்ரேல் நினைத்துக் கொண்டுள்ளது. அப்படி தாக்குதல் நடத்தினால் ஈரானின் பதிலடி எப்படி இருக்குமோ? எதிர் விளைவு என்ன ஆகுமோ? என்ற அச்சத்திலும் இஸ்ரேல் உள்ளது.

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலை தரைமட்டமாக்கி அழித்து விடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Post Tags: