வானிலை மாற்ற ஐ.நா.வின் பன்னாட்டு குழுவின் அறிக்கை தெரிவித்திருக்கும் அளவைக் காட்டிலும் 60% அதிகமாகவே கடல் நீர்மட்டம் உலக அளவில் அதிகரித்து வருவதாக சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சாட்டிலைட் படங்கள் இதனை பெரிதும் உறுதி செய்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


ஆனால் தொடர்ந்து வானிலை மாற்ற, புவிவெப்பமடைதல் விளைவுகளை அரசுகள் மறைத்து உண்மைக்குப் புறம்பான தகவல்களை அளித்து வருகிறது.

உதாரணமாக ஐ.ந. பன்னாட்டு வானிலை மாற்றக் குழுவின் அறிக்கையின் படி ஆண்டுக்கு கடல் நீர்மட்டம் 2மி.மீ என்றால் உண்மையில் 3.2மிமீ அதிகரித்து வருகிறது.

இது வெறும் துருவப்பகுதிகளில் பனி உருகுவதால் மட்டுமல்ல, புவிவெப்பமடைதலின் கண்ணுக்குப் புலப்படா பல காரணங்களினால் கடல் நீர்மட்டம் விரைவில் அதிகரித்து வருவது என்பதெ உண்மை என்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஐ.நா. பன்னாட்டுக்குழு புவிவெப்பமடைதல் விளைவுகளின் தரவுகளை திருத்திக் காட்டி வருவது எதனால்? இதனால் என்ன நன்மை?

உண்மையான தரவுகளை அளித்தால்தான் நாடுகள் அதற்குத் தயாராக முடியும்.

உலக நாடுகள் புவிவெப்பமடைதல் பற்றி தீவிரமாக சிந்திக்கவேண்டும், பொறுப்புடன் சிந்திக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் ஏற்கனவே கதறி வருகின்றனர்.

ஏற்கனவே டர்பன், மும்பை உள்ளிட்ட பெருநகரங்களுக்கே கடல் நீர்மட்ட உயவினால் ஆபத்து இருப்பதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில் நம் அரசுகாள் "பொருளாதார முன்னேற்றம்" பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கின்றன!