துபாயில் ஹம் என்பவர் கடந்த 2010ம் ஆண்டு முதல் ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தார். தனது விசாவை கேன்சல் செய்து விட்டு தாய்நாடு திரும்ப அனுமதிக்கும்படி கம்பெனி நிர்வாகிகளிடம் கேட்டார். அதற்கு கம்பெனி மறுத்து விட்டது. பல மாதங்கள் கேட்டும் தாய்நாடு திரும்ப அனுமதி கிடைக்காததால், மனம் உடைந்த ஹம் கடந்த திங்கட்கிழமை நன்றாக மது குடித்து விட்டு மெட்ரோல் ரயில் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டார். வேகமாக வந்த ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.



இதுகுறித்து மேஜர் ஜெனரல் கமிஸ் மத்தார் அல் மசீனா கூறுகையில், மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கி 3 ஆண்டுகள் ஆகின்றன. முதல் முறையாக ரயிலில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இறந்தவருக்கு 36 வயதிருக்கும். விசாவை கேன்சல் செய்ய உத்தரவிட கோரி தொழிலா ளர் துறை அமைச்சகத்திடம் அவர் புகார் கூறியுள்ளார். அதன்பின் விசா கேன்சல் செய்யப்பட்டுள்ளது. எனினும், அவரை தாய்நாட் டுக்கு அனுப்பாமல் கம்பெனி ஏன் தாமதப்படுத் தியது என்பது குறித்து விசாரிகிறோம் என்றார்.