இந்திய உணவு வகைகளை வெளிநாடுகளில் பிரபலப்படுத்தி புகழ்பெற்ற சமையல் கலைஞர் விகாஸ் கண்ணா, புதுடெல்லியில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அமெரிக்க அதிபர் ஒபாமா, கடந்த ஆண்டு ஏற்பாடு செய்திருந்த விருந்து நிகழ்ச்சியில் இந்திய உணவு வகைகளை நான் தயாரித்து வழங்கினேன். அப்போது என்னை அருகில் அழைத்த ஒபாமா, 'எனக்கு கூட இந்திய சமையல் நன்றாக தெரியும். குறிப்பாக, கைமா கறியை மிக பிரமாதமாக நான் சமைப்பேன்.
ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, எனது பாகிஸ்தான் அறைத் தோழன் மூலமாக கைமா கறி சமைக்க கற்றுக் கொண்டேன். ஒரு நாள், நீங்கள் வெள்ளை மாளிகைக்கு வந்து, என்னுடன் கைமா கறி சமைக்கும் போட்டியில் பங்கேற்க தயாரா?' என்று கேட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.