வாடிகன் புனித பீட்டர் தேவாலயத்தில் இன்று காலை 9.30 மணிக்கு (இந்தியாவில் மதியம் 2 மணி) தொடங்கிய திருப்பலி வழிபாட்டில் போப் ஆண்டவராக பிரான்சிஸ் பதவியேற்றுக் கொண்டார். இதையொட்டி 115 கார்டினால்களும் பங்கேற்ற சிறப்பு வழிபாட்டில் பாரம்பரிய முறைப்படி, போப் பதவிக்கு உரிய மீனவரின் மோதிரமும், `பாலியம்' எனப்படும் கம்பளி கழுத்துப்பட்டையும் போப் பிரான்சிசுக்கு அணிவிக்கப்பட்டது. அதை 2 கார்டினல்கள் அணிவித்தனர்.
புதிய போப்பாக அர்ஜென்டினா பியுனோஸ் ஏரிஸ் நகரின் ஆர்ச் பிஷப் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். லத்தீன் அமெரிக்காவிலிருந்து தேர்வு செய்யப்படும் முதல் போப் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக போப் ஆண்டவர் உள்ளார். இந்த பதவியில் இருந்த 16ம் பெனடிக் தனக்கு 85 வயதாகி விட்டதால் ஓய்வு பெறுவதாக கூறி போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து புதிய போப் ஆண்டவரை ஓட்டு போட்டு தேர்ந்து எடுக்கும் நடைமுறை தொடங்கி உள்ளது.
புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான ஓட்டு போடும் உரிமை 115 கர்தினால்களுக்கு உள்ளது. 48 நாடுகளை சேர்ந்த இந்த கர்தினால்கள் போப் ஆண்டவர் வசிக்கும் வாடிகன் நகரில் கூடி உள்ளனர். நேற்று இரவு 9 மணிக்கு அவர்கள் வாடிகனில் உள்ள புனித பீட்டர் தேவாலயம் அருகில் இருக்கும் சிஸ்டைன் சிற்றாலயத்தில் அமர்ந்தனர். சிவப்பு நிற உடை அணிந்து பாரம்பரிய பிரார்த்தனைகள் செய்து முடிந்த பிறகு, புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் பணியை அவர்கள் தொடங்கினார்கள்.
ஒவ்வொரு கர்தினலாக வாக்களித்தனர். நேற்றிரவு அவர்கள் தலா ஒரு தடவை வாக்களித்தனர். புதிய போப் தேர்தலில் யார்- யார் களத்தில் உள்ளனர் என்பது உள்ளிட்ட எல்லா தகவல்களும் பாரம்பரிய வழக்கப்படி ரகசியமாக உள்ளது. ஓட்டெடுப்பு தொடங்கி விட்டதால் கர்தினால்களுக்கும், மற்றவர்களுக்கும் உள்ள தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.