சான்டி புயல் தீவிரமடைந்து வருவதால், கனடா மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என செஞ்சிலுவை சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 செஞ்சிலுவை சங்கத்தின் இயக்குனர் மைக் மோர்ட்டோன் கூறுகையில், சான்டி புயல் தீவிரமடைந்து வருவதால் அடுத்த மூன்று நாட்களுக்கு தேவையான உணவு, மருந்து, குடிநீர் போன்றவற்றை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். வெள்ளம் ஏற்பட்ட பிறகு இடப்பெயர்ச்சி தேவைப்பட்டாலோ, மின்தடை ஏற்பட்டாலோ அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொருவரும் தம்முடைய அவசர உதவி பெட்டியில் 4 லிட்டர் தண்ணீர், கெட்டு போகாத உணவு, மின் விளக்கு, பணம், மருத்துவ முதலுதவி பெட்டி, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு தேவையான மருந்து போன்றவற்றை வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தற்போது வீசும் இந்த புயல் கடந்த 1988ஆம் ஆண்டுக்கு பிறகு வீசும் இரண்டாவது பெரிய புயல் என கனடா வானிலை ஆய்வாளர் கிரேக் லார்க்கின்ஸ் தெரிவித்தார்.

Post Tags: