by hari
இலங்கையில் இடம்பெற்ற 2012 இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தை மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது. இலங்கை அணியை 36 ஓட்டங்களால் வெற்றிகொண்டு மேற்கிந்திய தீவுகள் இந்த கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி மாலன் சமுவல்ஸின் அதிரடியில் 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றது. மேற்கிந்திய தீவுகள் சார்பில் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெயில் இன்று ஏமாற்றமளித்து 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். எனினும் மேற்கிந்திய தீவுகள் அணியின் இருப்பை உறுதி செய்த மாலன் சமுவல்ஸ் 6 சிக்சர்கள் அடங்களாக 78 ஓட்டங்களைப் பெற்றார். வேறு எவரும் பெரிதாக பிரகாசிக்கவில்லை. பிராவோ 19 ஓட்டங்களைப் பெற்றார். டெரன் சமி 26 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் இலங்கை அணி வீரர்கள் மிகவும் சிறந்த முறையில் செயற்பட்டனர். அஜந்த மென்டிஸ் 4 விக்கெட்களை வீழ்த்தினார். பதிலுக்கு 138 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.4 ஓவர்களில் சகல விக்கெட்களை இழந்து 101 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவிக் கொண்டது. இலங்கை அணி சார்பில் மஹேல ஜயவர்த்தன 33 ஓட்டங்களையும் குலசேகர 26 ஓட்டங்களையும் சங்கக்கார 22 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகள் சார்பில் டெரன் சமி விக்கெட்களை வீழ்த்தினார். இதன்படி சுமார் 33 வருடங்களின் பின் மேற்கிந்திய தீவுகள் அணி உலகக் கிண்ணம் ஒன்றை வென்றுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக இருபதுக்கு 20
கிரிக்கெட் இறுதிப் போட்டி கொழும்பு பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இலங்கை அணியினருக்கு ஊக்கமளிக்கும் வகையில் மைதானத்துக்கு நேரடியாக விஜயம்
செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது .
தமது அணி வெற்றி பெற்ற்றுள்ளது ஆட்டக்காரர்களுக்கு மட்டுமல்லாமல் மேற்க்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த நாடுகள் அனைத்துக்குமே மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கக் கூடிய விஷயம் என மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை இலங்கையின் பிரபல ஒலிபரப்பாளர் ஒருவர் தனது முகப்புத்தகத்தில் இலங்கை அணியின் தோல்வியின் பின் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்