சிறு‌நீரை அட‌க்க‌க் கூடாது

By Battinews → Thursday, April 12, 2012
சிறு‌‌நீரை அட‌க்க‌க் கூடாது எ‌ன்று பலரு‌ம் கூறுவா‌ர்க‌ள். ஆனா‌ல் ஏ‌ன் எ‌ன்று கூ‌றி‌யிரு‌க்க மா‌ட்டா‌ர்க‌ள்.

அதாவது, ‌சிறு‌நீரை அட‌க்‌கினா‌ல் ‌சிறு‌நீ‌ர்‌ப் பை‌யி‌ல் தே‌ங்கு‌ம் ‌சிறு ‌நீ‌ர், ‌சிறு‌நீ‌ர்‌ப் பையை ‌வி‌ரிவடைய‌ச் செ‌ய்யு‌ம்.

ஆர‌ம்ப கால‌ங்க‌ளி‌ல் இ‌ந்த ‌வி‌ரிவா‌க்க‌த்தா‌ல் அடிவ‌யி‌ற்‌றி‌ல் வ‌லி ஏ‌ற்படு‌ம். ‌சிறு‌நீ‌ர் வெ‌ளியேறு‌ம் உண‌ர்வு‌ம், உ‌ந்துதலு‌ம் ஏ‌ற்ப‌ட்டு ‌சிறுக‌ச் ‌சிறுக ‌சிறு‌நீ‌ர் வெ‌ளியேறு‌ம்.

ஆனா‌ல் நாளடை‌வி‌ல் இ‌ந்த வ‌லி ஏ‌ற்படுவது மறை‌ந்து ‌சிறு‌நீ‌ர்‌ப் பை‌தன‌க்கு‌ரிய செய‌ல் த‌ன்மையை மெ‌ல்ல மெ‌ல்ல இழ‌ந்து ‌விடு‌ம்.

இ‌ப்படி ‌சிறு‌நீரை அட‌க்குவதா‌ல் ஏ‌ற்படு‌ம் பா‌தி‌ப்பு ஆ‌ண்களை ‌விட பெ‌ண்களு‌க்கே அ‌திகமாக உ‌ள்ளது.