மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி உள்ள 'கடல்' படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்திய கிறிஸ்தவ ஜனநாயக கட்சி, கிறிஸ்தவர்களை புண்படுத்தும் காட்சிகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜை நேரில் சந்தித்து இது தொடர்பான புகார் மனுவை அளித்தனர்.
இன்னொரு காட்சியில் நாயகன் பிரசவம் பார்க்கிறான். அப்போது கையில் படும் ரத்தத்தை ஏசுவின் ரத்தம் என்கிறார். இவை கிறிஸ்தவர்களை நோகடிப்பவை ஆகும். அர்ஜுன் தன்னை சாத்தான் என கூறிக்கொள்கிறார். அவரது பெயர் பெர்க்மான்ஸ் என குறிப்பிடப்படுகிறது. பெர்க்மான்ஸ் என்பவர் கிறிஸ்தவ பாடகர் ஆவார்.
ஏசுவின் படத்தை நாயகன் உடைப்பது போன்றும் காட்சி உள்ளது. கிளைமாக்சில் சாத்தான் ஜெயித்து விட்டது என்ற வசனம் வருகிறது. ஆண்டவர் மீது சத்தியம் என்ற வசனம் உள்ளது. கிறிஸ்தவர்களை புண்படுத்தும் இத்தகைய காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும். மணிரத்னம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்" குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பைச் சேர்ந்த நிறுவனர் இயேசுமூர்த்தி, கிறிஸ்தவர்களை அவமதிக்கும் காட்சிகளை ஒரு வார காலத்திற்குள் நீக்காவிட்டால் படத்தை தடை செய்யக்கோரி போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.