வணக்கம் நண்பர்களே..! இப்போதெல்லாம் அனைவரிடம் பாக்கெட்டில் பணம் இருக்கிறதோ இல்லையோ அழகான ஆன்ட்ராய்ட் மொபைல் (Android) இருக்கிறது. கையில் மொபைல் இல்லாத இளைஞர்களை இப்போது பாரப்பது அபூர்வம். இளைஞர்கள் மத்தியில் தற்போது இணையத்துடன் கூடிய மொபைல்களை (Mobile with Internet) பயன்படுத்துவது என்பது தற்கால நாகரீகமாகவே மாறிவிட்டது. இணைய இணைப்பு இல்லாத மொபைல்களை வைத்திருப்பவர்களை கண்டாலே ஏற இறங்கப் பார்க்கின்றனர். அந்த அளவுக்கு மொபைல்களில் இணையப்பயன்பாடு மற்றும் முக்கியத்தவம் அதிகரித்துவிட்டது.

இணைய வசதியுடன் கூடிய மொபைல்கள் குறிப்பாக விலையுயர்ந்த மொபைல்கள், அதிக வசதிகளடங்கிய மொபைல்கள் (More Feautres)என நாளுக்கு நாள் வந்துக்கொண்டிருக்கிறது. நம்மவர்கள் விடாமல் பழைய மாடலை மாற்றிவிட்டு, புதிய மாடல்களுக்கு(New Model Phone) மாறுகின்றனர்.

ஆனால் மொபைல் பாதுகாப்பில் இவர்கள் கவனம் செலுத்துகிறார்களா?என்றால் அதுதான் இல்லை. அதிக விலைப்போட்டு வாங்கிய மொபைல்களை (Costly Mobiles) வைரஸ் தாக்கத்திலிருந்து காப்பதற்குரிய சரியான மென்பொருள்களை இவர்கள் பாவிப்பதில்லை. கட்டணம் கொடுத்து ஆன்டி வைரஸ் மென்பொருள்களை வாங்க இயலாதவர்கள் கீழிருக்கும் அற்புதமான, பயன்மிக்க இலவச மென்பொருள்களைப் பயன்படுத்தலாம். இவற்றை இலவசமாக தரவிறக்கம் செய்து உங்கள் மொபைல்களின் பாதுகாப்பை உறுதி செய்யலாம்.

மொபைல்களைப் பாதுகாக்க என்னென்ன மென்பொருள்கள் உள்ளன? எவை எவையெல்லாம் இலவசமாக கிடைக்கின்றன்? வாருங்கள் பார்ப்போம்..

உங்கள் மொபைல் போனைக் காப்பதற்கான Anti Virus ஒரு சில இருக்கின்றன. இலவசமாக கிடைப்பதில் சிறந்து விளங்குபவை கீழிருப்பவைகள்.




1. AVG Mobilation


AVG மொபைல் ஆன்டி வைரஸ்
இது உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல்களுக்கான இலவச ஆன்டிவைரஸ் ஆகும். ஆண்ட்ராய்ட் மொலைப்களுக்காக சிறப்பு வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் இதுவாகும்.

AVG Mobilation for Android features

  1. Scans apps, Setting, Files, Media in real time
  2. Backup and restore valuable apps and data
  3. kill tasks that slow tablet down
  4. Find lost or stolen tablet via google maps
  5. Lock and wipe device remotely protect privacy
இம் மென்பொருளைத் தரவிறக்குவதற்கு : Download AVG Security

2. Lookout Mobile Security


lookout mobile security (mobile antivirus)
Lookout Mobile Anti-virus software
இந்த வைரஸ் மெனப்பொருள் மொபைல்களுக்கு பாதுகாப்பு (Mobile Security) வழங்குவதில் நன்றாக செயல்படுகிறது. இம்மென்பொருளில் Online Storage வசயுடன் இருப்பதால் உங்களுடைய அனைத்து தகவல்களையும் சேமித்து வைக்கலாம். மேலும் உங்கள் மொபைலில் உள்ள அனைத்து தகவல்களையும்(All Data)காப்பி செய்துகொண்டு வேண்டும்போது பயன்படுத்தலாம். இமென்பொருளைத் தரவிறக்கம் கீழிருக்கும் இணைப்பைச் சொடுக்கவும்.

தறவிறக்க இணைப்புச் சுட்டி: Download Mylook Out Mobile Anti Virus

3. NetQin Mobile Antivirus:

மொபைல் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்
இச்சிறு வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் (Anti Virus Software) துரிதமாக செயல்படுகிறது. மொபைல்களுக்கு வைரஸ்களிடமிருந்து மிகச் சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது. கீழிருக்கும் இணைப்பைச் சொடுக்கி உங்கள் மொபைல்களுக்குத் தேவையான Anti virus Sotware தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

தரவிறக்கச் சுட்டி: Download NetQit Mobile anti virus

குறிப்பு: ஒவ்வொரு தளத்திலும் தரவிறக்கம் செய்யும்போது, உங்களுடைய மொபைல் மாடல், மொபைல் நிறுவனத்தின் பெயர், மொழி (Mobile model, the mobile company's name, language) ஆகியவற்றை கொடுத்து டவுன்லோட் (தரவிறக்கம்)செய்துகொள்ளுங்கள்... நன்றி நண்பர்களே..!!!