ஸ்மார்ட்போன்களிலேயே அதிவேகமாக இயங்குவது சாம்சங் கடந்த வாரம் அறிமுகம் செய்த சாம்சங் கேலக்சி S4 ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் ஃபோன் என்று கிரீக்பென்ச் தயாரிப்பு நிறுவனமான பிரைமேட் லேப்ஸ் ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ளது.
ஆண்ட்ராய்ட் அதாரிட்டி தரநிலைகளின் அடிப்படையில் சாம்சங் கேலக்ஸி S4 ஸ்மார்ட் போனுக்கு இந்த அந்தஸ்து கிடைத்துள்ளது.
சாம்சங் கேலக்சி S4 ஸ்மார்ட் போன் , ஆப்பிள் ஐஃபோன் 5 மற்றும் பிற உபகரணங்களுடன் ஒப்புநோக்கப்பட்டதில் சாம்சங் கேலக்சி வெற்றி பெற்றது.
அட்டவணையில் சாம்சங் கேலக்சி S4 -ற்கு 3163 மார்க்குகள் கிடைத்துள்ளதால் முதலிடம் பெற்றது.
இந்த ஸ்மார்ட் போனின் குவாட் கோர் குவால்காம் புரோசசரே இதன் வேகத்திற்குக் காரணம் என்று ஆண்ட்ராய்ட் அத்தாரிட்டி தெரிவித்துள்ளது.
இதற்கு அடுத்தபடியான இடத்தில் சற்றும் எதிர்பாராத புதிய எச்டிசி ஒன் இருந்தது. இதற்கு கிடைத்த மதிப்பெண் 2,687.
சாம்சங்கிடம் தகராறு செய்து வரும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 5-ற்கு 1596 மதிப்பெண்களே கிடைத்ததோடு 5வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
6 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஒரிஜிடன் ஐபோன் அறிமுகம் செய்யப்பட்டபோது 130 மதிப்பெண்கள் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது..