தூண்டிலில் சிக்கும் மீன்கள் தண்ணீரில் இருந்து வெளியே வந்தவுடன் துடித்து துள்ளுகின்றன. அவை தூண்டில் முள் குத்திய வேதனை மற்றும் வலியால் துடிப்பதாக நாம் நினைக்கிறோம்.
அது தவறு. தூண்டிலில் சிக்கும் போது மீன்களால் அதன் வலியை உணர முடியாது. ஏனெனில் மீனுக்கு மூளையோ அல்லது உணர்வுகளை அறியக்கூடிய நரம்பு செல்களோ கிடையாது.
மாறாக தூண்டிலில் சிக்கியவுடன் அதில் இருந்து தப்பிக்க மீன்கள் போராடுகின்றன. இந்த தகவலை விஸ்கான்சின் பல்கலைக்கழக உயிரியல் மற்றும் வாழ்வியல் துறை பேராசிரியர் ஜிம்ரோஸ் தெரிவித்துள்ளார்.
இவர் தலைமையிலான குழுவினர் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மனிதர்களின் உடலில் ஆசிட் மற்றும் தேனீயின் விஷத்தை செலுத்தினர். அது அவர்களுக்கு வேதனை மற்றும் வலியை தந்தது.
அதே நேரத்தில் மீனின் தாடையில் தூண்டில் முள்ளினால் குத்தினர். ஆனால் மீனிடம் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் தெரியவில்லை. மீண்டும் தண்ணீரில் விட்டதும் அது துள்ளிக் குதித்து ஓடிவிட்டது.