தற்கொலை செய்வற்காக, குடித்து விட்டு, ரயில் தண்டவாளத்தில், விழுந்து கிடந்த எஜமானரை, மீட்ட நாய், ரயில் மோதி உயிரிழந்தது.


ரஷ்யாவின், காரகண்டா நகரை சேர்ந்த 48 வயதான நபர் ஒருவர், அடுத்தடுத்து, ஏற்பட்ட, இழப்புகளை தாங்க முடியாமல், சோகத்தில் ஆழ்ந்திருந்தார். "இனி, உயிர் வாழ்வதை விட, செத்துப் போகலாம்' என நினைத்த அவர், ஆசையாக வளர்த்து வந்த நாயை, அழைத்துக் கொண்டு, ரயில் பாதைக்கு சென்றார்.கையில் கொண்டு வந்திருந்த, "வோட்கா' மது பாட்டிலை திறந்து, ஆசை தீர குடித்தார். பின், போதை மயக்கத்தில், தண்டவாளத்தில், தலை வைத்து படுத்து தூங்கி விட்டார்.சிறிது நேரம் கழித்து, தண்டவாளத்தில் ரயில் வருவதை கண்டு, அதிர்ச்சி அடைந்த, அவரது நாய், உடனே, துள்ளிக் குதித்தவாறு, பாய்ந்து சென்று, தனது எஜமானரை, சிரமப்பட்டு இழுத்து, தள்ளி விட முயற்சி செய்தது. இக் காட்சியை கண்ட, ரயில் டிரைவர், அவசர "பிரேக்'கை, போட்டார்.

ரயிலின் வேகம், மெல்ல மெல்ல, குறையத் துவங்கியது. அதே நேரத்தில், எஜமானரை, தண்டவாளத்தில் இருந்து, ஒரு வழியாக, தள்ளி விட்டு, ரயிலை திரும்பி பார்த்தது நாய். துரதிருஷ்ட வசமாக, நாயின் மீது ஏறி, அதை, நசுக்கியபடி நின்றது ரயில்.எவ்வளவு முயன்றும், நாயைக் காப்பாற்ற முடியாமல் போன வருத்தத்தில் இருந்த, ரயில் டிரைவர், உடனே, உள்ளூர் ரயில் நிலைய போலீசாருக்கு, தகவல் தந்தார். தற்கொலைக்கு முயன்றவர், சில காயங்களுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Post Tags: