ஜப்பானில் கடந்த ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது அடித் துச் செல்லப்பட்ட கால்பந்து ஒன்று அமெரிக்காவின் அலஸ்கா தீவுப் பகுதியில் கரையொதுங்கியுள்ளது.

இந்த கால்பந்தை பெற்ற நபர் அதனை அதன் உரிமையாளரிடம் வழ ங்க திட்டமிட்டுள்ளார்.


மேற்படி கால்பந்தில் அதன் உரி மையாளரின் பெயர் மற்றும் அவரது விலாசம் எழுதப்பட்டிருந்ததைக் கொண்டே அந்த கால்பந்தை பெற்ற டேவிட் பெக்ஸ்டர் என்ற நபர் அதனை உரிமையாளருக்கு திரும்ப வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி இந்த கால்பந்தின் உரிமையாளர் 16 வயதான மிசாகி முரகாமி என்று தெரிய வந்துள்ளது.

தனது கால்பந்து கண்டுபிடிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் மகிழ்ச்சிய டைந்துள்ள முரகாமி ‘சுனாமியால் எனக்கு சொந்தமான ஒன்றும் இல் லாமல் போனது. எனது கால்பந்து கிடைக்கப்பெறுவதையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்று ஜப்பானின் டி.பி.எஸ். தொலைக்காட்சிக்கு தெரி வித்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் முர காமியின் வீடு முற்றாக அழிந்துள்ளது.