நைஜீரியாவை சேர்ந்த மாணவிகள், சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளனர்.உலகம் முழுவதும் மின்சாரப்பற்றாக்குறை நிலவுகிறது. ஆப்ரிக்கா நாடுகளில் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.இதற்கிடையே, ஆப்ரிக்க நாடான நைஜீரியாவை சேர்ந்த மாணவிகள், மூன்று பேர், சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை கண்டு பிடித்துள்ளனர். லகோஸ் நகரில் நடந்த, ஆப்ரிக்க சிறு முதலீட்டாளர்கள் மாநாட்டில், இந்த மாணவிகள், தங்கள் கண்டுபிடிப்பை விளக்கினர்.

இவர்கள் கண்டு பிடிப்பின் படி, சிறுநீர், நைட்ரஜன், தண்ணீர், ஹைட்ரஜனாக பிரிக்கப்படுகிறது. பின், ஹைட்ரஜன், வடிகட்டப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது. பிறகு அது, சிலிண்டரில் அடைக்கப்படுகிறது. ஹைட்ரஜன், போராக்ஸ் திரவமாக மாறுகிறது. அதிலிருந்து ஹைட்ரஜன் வாயு தனியாக பிரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட ஹைட்ரஜன் வாயு, ஜெனரேட்டருக்கு சென்று மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது."ஒரு லிட்டர் சிறுநீரை பயன்படுத்தி, ஆறு மணி நேரத்திற்கு தேவையான மின்சாரம் தயாரிக்க முடியும்' என்பதை இந்த மாணவிகள் நிருபித்துள்ளனர்.