சவுதி அரேபியாவில் உள்ள நெடுங்சாலையில் குண்டு வெடித்தது. சாலையில் சென்று கொண்டிருந்த எரிப்பொருள் லாரி வெடித்து சிதறியதில் 22 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். சவுதி தலைநகர் ரியாதில் இன்று காலை 7 மணி அளவில் நெடுஞ்சாலை சுரங்க பாதை வழியாக சென்று கொண்டிருந்த எரிபொருள் லாரி ஒன்று வெடித்து சிதறியது. லாரியிலிருந்த எரிப் பொருள் கசிந்து ஓடியதால் தீ அருகேயிருந்த தொழில்துரை கட்டிடங்கள் மற்றும் சாலையில் சென்று கொண்டிருந்த கார்கள் என அனைத்தும் பற்றி எரிந்தன. நாசவேலைக்காக சுரங்கபாதையில் குண்டு வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரியவந்தாலும் இந்த சம்பவம் தொடர்பாக எந்த அமைப்பும் இதுவரை பொருப்பேற்க வில்லை. இந்த மோசமான குண்டு வெடிப்பில் இதுவரை 22 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். தீயை கட்டுப்படுத்த பல மணி நேரமாக தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இதில் சிலர் மோசமான காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பல கி.மீ தூரத்திற்க்கு புகை பரவியதால் மீட்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது குண்டு வெடிப்பால் கிழக்கு ரியாத் முழுவதுமே புகை மண்டலமாக மாறியுள்ளது.