by hari
கடந்த 18ம் திகதி ஆரம்பித்த உலக TWENTY TWENTY தொடர் தனது இறுதி நாளை இன்று எட்டியுள்ளது.இந்த உலக TWENTY TWENTY தொடரில் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளன.இந்த போட்டியானது இன்று இரவு 7.00 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இவ்விரு அணிகள் மீதும் இத்தொடர் ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்புக்கள் இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது .
இன்றைய போட்டி அணியாகச் சேர்ந்து விளையாடும், துடிப்பான அணியாகிய இலங்கை அணிக்கும் அதிரடியைக் கொண்ட, களத்தில் மகிழ்ச்சியான தருணங்களைச் செலவிட விரும்புகிற அணியாகிய மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையிலான போட்டியாக அமையவுள்ளது.
இலங்கை அணி இத்தொடர் முழுவதும் மஹேல ஜெயவர்தனவின் தலைமைத்துவத்தின் கீழ் அணியாக இணைந்து, துடிப்பான கிரிக்கெட்டைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி அதிரடியான துடுப்பாட்ட வீரர்களைத் தங்கள் வசம் கொண்ட ஓர் அணி என்பதோடு, களத்தில் எப்போதும் மகிழ்ச்சியை, கேளிக்கையை விரும்புகின்ற ஓர் அணியாகக் காணப்பட்டு வந்துள்ளது.விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்ட போதும், வெற்றிகளைப் பெற்றுக் கொள்ளப்பட்ட போதும் "கங்னம்" வகை நடனங்களை ஆடி தங்கள் மகிழ்ச்சிகளை அவ்வணி வெளிப்படுத்தி வருகின்றது.

இலங்கை அணி இத்தொடர் முழுவதும் தொடர்ச்சியாகச் சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி வந்த அணியாகக் காணப்படுகிறது.
தென்னாபிரிக்க அணிக்கெதிரான 7 ஓவர்கள் கொண்ட போட்டி தவிர, ஏனைய போட்டிகளில்
எல்லாம் இலங்கை அணி வெற்றிகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.மேற்கிந்தியத்
தீவுகள் அணி குழுநிலைப் போட்டிகளில் வெற்றியொன்றையும் பெறாததோடு, சுப்பர் 8
சுற்றில் இலங்கையிடம் தோல்வியையும் சந்தித்திருந்தது.ஆனால் அரையிறுதிப்
போட்டியில் அவுஸ்ரேலியாவிற்கெதிரான போட்டியில் மாபெரும் அதிரடியை
நிகழ்த்தியிருந்தது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி நீண்ட காலத்திற்குப் பின்பு உலக கிண்ணத்
தொடரொன்றின் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளதோடு, இலங்கை அணி
இறுதியாகத் தகுதிபெற்ற 3 உலக கிண்ண இறுதிப் போட்டிகளிலும் தோல்வியடைந்த
நிலையில் நான்காவது உலக கிண்ண இறுதிப் போட்டியில் பங்குபெறவுள்ளது.இலங்கை
அணித் தெரிவில் காணப்படக்கூடிய ஒரே குழப்பம் ரங்கன ஹேரத்தா அல்லது அகில
தனஞ்சயவா என்பது தான். அனுபவமா அல்லது மாயச் சுழற்பந்து வீச்சா என்பது
தான்.இறுதிப் போட்டிக்கான அழுத்தத்தை அகில தனஞ்சய தாங்கிக் கொள்வாரா அல்லது
ரங்கன ஹேரத்தின் அனுபவம் தேவைப்படுமா என்பது தான் எழுந்துள்ள
கேள்வி.அரையிறுதிப் போட்டியில் ரங்கன ஹேரத்தின் சிறப்பான பந்துவீச்சின்
பின் ரங்கன ஹேரத்தைச் சேர்க்க அதிக வாய்ப்புக்கள் உள்ளன.
எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி:
திலகரட்ண டில்ஷான், மஹேல ஜெயவர்தன குமார் சங்கக்கார, லஹிரு திரிமன்ன, ஜீவன்
மென்டிஸ், அன்ஜலோ மத்தியூஸ், திஸர பெரேரா, நுவான் குலசேகர, லசித் மலிங்க,
அஜந்த மென்டிஸ், ரங்கன ஹேரத்மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சுத் தொடர்பாக கேள்விகள் காணப்படுகின்ற போதிலும், அன்ட்ரே ரசலிற்குப் பதிலாக மாற்றீடு செய்யக்கூடிய சிறந்த போர்மிலுள்ள பந்துவீச்சாளர் இல்லை என்பதால் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் இல்லை.
எதிர்பார்க்கப்படும் மேற்கிந்தியத் தீவுகள் அணி:
கிறிஸ் கெயில், ஜோன்சன் சார்ள்ஸ், மார்லன் சாமுவேல்ஸ், கெரான் பொலார்ட்,
டுவைன் பிராவோ, அன்ட்ரே ரசல், டெரன் சமி, டினேஷ் ராம்டின், சுனில் நரைன்,
சாமுவேல் பத்ரி, ரவி ராம்போல்
இன்று இரவு தெரிய வரும் யார் கிண்ணத்தை சுவீ கரிக்க போகின்றார்கள் என்று........ பொறுத்திருந்து பார்ப்போம்.....