நிம்மதியான தூக்கத்தின் மூலம் மூளையின் செயற்பாட்டையும் வினைத்திறனையும் அதிகரிக்க முடியும் என்பதை ஆய்வாளர்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதன் மூலம் நினைவாற்றலை அதிகரித்து அதிகளவு தகவல்களை மூளைக்கு உள்வாங்கலாம் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உறக்கத்தின்போது மூளை தனது ஆற்றலை அதிகரித்து, எதிர்கால செயற்பாடுகளுக்கு வினைத்திறனான முறையில் தயாராவதாக சர்வதேச ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நிம்மதியற்ற மற்றும் போதிய தூக்கமின்மையால் உரிய முறையில் செயற்படுவதற்கு மூளைக்கு சிக்கல்கள் ஏற்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மூளை வினைத்திறனாக செயலாற்றுவதற்கு செலுத்தப்படும் ஒரு விலையே தூக்கம் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Post Tags: