
பெயர் வைத்ததற்காக மன்னிப்பு கோரியுள்ளது. அதுமட்டுமல்லாது இந்த பெயரைமாற்றம் செய்யவும் முடிவு செய்துள்ளது.அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில்
உள்ள போர்லேண்ட்டில் பர்ன்சைட் ப்ரீவிங் என்ற மதுபான தொழிற்சாலை உள்ளது.
இந்த நிறுவனம் நேற்று முன்தினம் காளி மா என்ற பெயரில் பீர் வகையை
அறிமுகப்படுத்த இருந்தது. இதற்காக இந்நிறுவனம் விளம்பரங்களை வெளியிட்டு
வந்தது. இந்து கடவுள் பெயரிலும், காளி உருவத்தை அச்சிட்டும்
அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த பீர் குறித்து இந்தியாவில், பார்லிமென்ட்
உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள
இந்திய தூதரிடம் தெரிவிக்கப்பட்டது.இந்த நிகழ்வுகளை கேள்விப்பட்ட
பர்ன்சைட் ப்ரீவிங் நிறுவனம், நாங்கள் தயாரித்துள்ள பீர், இந்திய நறுமண
பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டது. எனவே, தான் காளி மா என்ற பெயரை
வைத்தோம். ஆனால், இது இந்து கடவுள் பெயர் என்பது எங்களுக்கு தெரியாது.
எனவே, இந்த பீரை காளி மா பெயரில் அறிமுகப்படுத்துவதை நிறுத்தியுள்ளோம்.
இந்த பீர் வகையை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் வாடிக்கையாளர் சிறிது
காலம் பொறுத்திருக்கும் படி வேண்டுகிறோம் என தெரிவித்துள்ளனர்.