டைட்டானிக் கப்பலின் முதல் பயணத்தின் போது விற்கப்பட்ட டிக்கெட், டின்னர் மெனு, கப்பலின் மற்ற பாகங்கள் நியூயார்க் நகரில் நேற்று நடந்த ஏலத்தில் விற்கப்பட்டது.
100 ஆண்டுகளுக்கு முன்பு 1912ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி தெற்கு இங்கிலாந்தில் உள்ள செளதாம்ப்டனிலிருந்து நியூயார்க்குக்கு தனது முதல் பயணத்தைத் தொடங்கியது டைட்டானிக் கப்பல்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக நடுக் கடலில் பனிப் பாறை ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது.
இந்த விபத்தில் 1500 பேர் உயிரிழந்தனர்.
இந்தக் கப்பலின் டிக்கெட் ஒன்று ஏலத்திற்கு வந்தது.
சுமார் 56,250 டாலருக்கு அந்த டிக்கட் ஏலத்தில் எடுக்கப்பட்டது.
இதேபோன்று,டின்னர் மெனு, உள்ளிட்டவைகளும் ஏலத்தில் விற்கப்பட்டன.
வெவ்வேறு இடங்களில் உள்ள சேகரிப்புகளை கொண்டு வந்து விரைவில் அதனை விற்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஏலம் நடத்துபவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், டைட்டானிக் நிறுவனத்திற்கு சொந்தமான 5000 கலைநுட்ப பொருட்கள் விற்பனைக்கு வர உள்ளதாகவும், அதன் மதிப்பு பல நூறு மில்லியன் டாலர்கள் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
Labels:
உலகம்