தேச பிதா மகாத்மா காந்தி சுட்டுக்கொன்ற போது, புல் தரையில் சிதறிய ரத்தம் மற்றும் மண் லண்டனில் நேற்று ஏலம் விடப்பட்டது.

லண்டன் ஷ்ரோப்ஷயர் ஏல நிறுவனம் நடத்திய ஏலத்தில் காந்தியின் ரத்தம் படிந்த மண்ணும் புல்லும் இந்திய ரூபாயின் மதிப்பில் 8 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.

காந்தியின் அடையாளமாக கருதப்பட்ட வட்ட வடிவ மூக்கு கண்ணாடி 27 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.

1931 - ம் ஆண்டு லண்டன் சென்ற போது காந்தி எடுத்த புகைபடங்கள், அவர் உபயோகித்த மரத்திலான சக்கரம், காந்தியடிகள் எழுதிய சில கடிதங்கள், குஜராத் மொழியில் எழுதப்பட்ட புத்தகம் ஒன்று ஆகியவையும் ஏலம் விடப்பட்டன.

இவை அனைத்தும் 82 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. பெயரை வெளியிடாத இங்கிலாந்தை சேர்ந்த நபர ஒருவர் தொலைபேசி வாயிலாக காந்தியின் பொருட்களை ஏலம் எடுத்ததாக ஏல நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

ரத்தம் தோய்ந்த புல்லும், மண்ணும் கண்ணாடியால் ஆன மேல்புறத்தை கொண்ட ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் உண்மை தன்மையை உறுதி செய்வதற்கான கடிதமும் அதில் வைக்கப்பட்டிருந்தது.

காந்தி எழுதிய கடிதங்கள், ஆன்மீக தகவல்கள் அடங்கிய பழங்கால இசைத்தட்டு மற்றும் ஆவணங்கள் போன்றவையும் ஏலம் விடப்பட்டன.