Browsing "Older Posts"

Browsing Category "muslim"

புத்தளம் நகரில் இரு முஸ்லிம் பாடசாலை மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட பின்னர் மீண்டும் கடத்தப்பட்ட இடத்திலேயே விடுவிக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புத்தளம் மூர் சந்தியில் வசிக்கும் இரு சகோதரர்கள் நேற்று முன்தினம் இரவு ஜீப் வண்டியில் வந்த இருவரால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் மூர் சந்தியில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் க.பொ.த. (சாஃத) முடித்த மாணவர் ஒருவரும் இம்முறை க.பொ.த (சாஃத) எழுதவுள்ள மாணவருமே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளனர்.

இதில் ஒருவருக்கு பாரிய காயங்கள் என்பதால் பத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முஸ்லிம் பாடசாலை மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட பின்னர் விடுவிப்பு

By Battinews → Friday, March 15, 2013

இன்று திங்கட்கிழமை கம்பஹா மாவட்டத்திலுள்ள மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீதும், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள ஒப்பநாயக்க பள்ளி வாசல் மீதும் அடையாளந் தெரியாத நபர்கள் கல் வீச்சு தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக மஹர சிறைச்சாலை வளாகத்திலுள்ள பள்ளி வாசல் சிறைச்சாலைக்குரிய காணியில் அமைந்திருந்தாலும் உள்ளுர் முஸ்லிம்களே தொழுகையில் ஈடுபட்டுவருவதாக பள்ளி வாசல் நிர்வாகியொருவர் தெரிவித்துள்ளார்.

இப் பள்ளிவாசலை அகற்றுமாறு ஒரு மாதத்திற்கு முன்னர் சிறைச்சாலைகள் மற்றும் புனர் வாழ்வு அமைச்சு தங்களுக்கு அறிவித்திருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.

மஹர பள்ளிவாசல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் நபர்கள் பள்ளிவாசல் சுவரில் பன்றியை வரைந்து ஆங்கிலத்திலும் சிங்களத்தீலும் ஹலால் பன்றி என எழுதிவிட்டு சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இரு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள்

By Battinews → Monday, March 4, 2013

விஸ்வரூபம்' பட விவகாரம் தொடர்பாக, அரசு தரப்பு, முஸ்லிம் அமைப்பினர், கமல் தரப்பினர் இடையே நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.
விஸ்வரூபம் பட விவகாரத்தில், "முஸ்லிம் அமைப்பினருடன், கமல் பேசி சமரச ஒப்பந்தம் செய்து கொண்டால், படத்தை வெளியிட, அரசு ஒத்துழைக்கும்' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். இதையடுத்து, நேற்று முன் தினம், முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சு நடத்த, கமல் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு, கமல்ஹாசன், முஸ்லிம் அமைப்பினர் என, முத்தரப்பும் ஒரே நேரத்தில் பேச்சு நடத்த வேண்டும் என்று, முஸ்லிம் அமைப்புகள் சார்பில், ஒரு மனதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று, 12:00 மணிக்கு, தலைமை செயலகத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் நிர்வாகி சந்திரஹாசன், டைரக்டர் அமீர், முஸ்லிம் அமைப்புகள் சார்பில், இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஹனீபா, சிக்கந்தர் ஆகியோர், உள்துறை செயலர் ராஜகோபாலை சந்தித்து பேசினர்.


அப்போது, முத்தரப்பு பேச்சு வார்த்தையில் பங்கேற்க சம்மதம் தெரிவித்து கடிதம் கொடுத்தனர். முத்தரப்பு பேச்சுவார்த்தை குறித்தும், ஆலோசனையை எங்கே நடத்துவது என்பது குறித்தும், உள்துறை செயலர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து பேசினர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த ஆலோசனைக்கு பின், நேற்று மாலை பேச்சுவார்த்தை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், மாலையில் கூட்டம் நடக்கவில்லை.


இன்று மாலை 4 மணியளவில் துவங்கிய பேச்சுவார்த்தை, மாலை 6.30 மணியளவில் நிறைவு பெற்றது. பேச்சுவார்த்தை குறித்து இரு தரப்பினரும் பத்திரிகையாளர்களிடம் விளக்க உள்ளதாக கூறப்படுகிறது.

விஸ்வரூபம் தொடர்பாக அரசு தரப்பு, முஸ்லிம் அமைப்பினர், கமல் தரப்பினர் பேச்சு முடிந்தது

By Battinews → Saturday, February 2, 2013