4 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் இன்று நாடு திரும்பினார்.
1999 ஆண்டில் நவாஸ் ஷெரீப் அரசைக் கவிழ்த்துவிட்டு ஆட்சிக்கு வந்த முஷாரப், 2008ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வியைச் சந்தித்தார்.
இதைத் தொடர்ந்து, புதிய அரசு எச்சரிக்கை விடுத்ததையடுத்து, அவர் பாகிஸ்தானை விட்டு வெளியேறி துபாயில் குடியேறினார்.
இந்த நிலையில், மே மாதம் பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடப்பதையொட்டி இன்று நாடு திரும்புவதாக அவர் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
முஷாரப் நாடு திரும்பினால் சுட்டுக் கொல்வோம் என்று தலிபான் தீவிரவாத இயக்கம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த எச்சரிக்கை மீறி பர்வேஸ் முஷாரப் துபாயில் இருந்து இன்று பாகிஸ்தானுக்கு திரும்பினார்.
பாகிஸ்தானில் மே 11ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் பங்கேற்பதற்காக முஷாரப் 4 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பியுள்ளார்.