பிரேசில் ரியோ டி ஜெனிரோவின் வடக்கு மலைப் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 300 மில்லிமீட்டர் அளவிலான மழை அங்கு கொட்டித்தீர்த்துள்ளது. இந்த பேய் மழைக்கு ஆற்றின் கரைகள் உடைந்து நகரின் பெட்ரோபோலீஸ் நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாயின.
மேலும், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் 50 வீடுகள் முழுமையாக இழுத்து செல்லப்பட்ட நிலையில் குறைந்தது 27 பேர் பலியாயினர். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 900 பேர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.