அமெரிக்க பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஒபாமா உரை ஆற்றினார். அப்போது அவர் கூறும்போது, ‘‘ஆப்கானில் உள்ள அமெரிக்க படைவீரர்களில்  34 ஆயிரம் பேர், அடுத்த ஓராண்டுக்குள் திரும்ப பெறப்படுவார்கள். அவர்கள் அமெரிக்காவுக்கு வந்துவிடுவார்கள். அத்துடன் ஆப்கானுக்கு எதிராக அமெரிக்கா தொடுத்த போர் முடிவுக்கு வரும்’’ என கூறினார்.

அமெரிக்காவில் கடந்த 2001–ம் ஆண்டு செப்டம்பர் 11–ந் தேதி பின்லேடனின் அல்கொய்தா தீவிரவாதிகள் விமானங்களை மோதி பெரும் தாக்குதலை நடத்தியதும், அந்த தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளித்த ஆப்கான் தலீபான் அரசுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுத்ததும்  குறிப்பிடதக்கது.

ஆப்கானிலிருந்து தனது நாட்டுப்படை வீரர்கள் முழுமையாக திரும்பப்பெறப்பட்டு விடுவார்கள் என்ற ஒபாமாவின் அறிவிப்புக்கு அமெரிக்க ராணுவ மந்திரி லியோன் பெனட்டா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானை வெற்றிகொள்வதற்கு ஜனாதிபதி எடுத்துள்ள இந்த முடிவு, நம்மை சரியான பாதையில் அழைத்துச்செல்லும் என்று லியோன் பெனட்டா கூறினார்.

Post Tags: