அமெரிக்காவின் நியூடவுன் நகரில் உள்ள ஆரம்ப பள்ளியில் அடையாளம் தெரியாத நபர் புகுந்து, திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 18 குழந்தைகள் உட்பட 27 பேர் பலியாகினர்.அமெரிக்காவின் கனெக்டிக்கட் மாகாணத்தில் உள்ள நியூடவுனில், சாண்டிஹுக் மழலையர் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், அந்நாட்டு நேரடிப்படி நேற்று காலை 9 மணிக்கு முகமூடி  அணிந்த 20 வயது நபர் ஒருவர் கைகளில் நவீன துப்பாக்கி
களுடன் நுழைந்தார்.யாரும் எதிர்பார்க்காத நிலையில், குழந்தைகள் வகுப்பறையில் புகுந்த அந்த நபர் திடீரென தன்னிடம்  இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட ஆரம்பித்தான். இதில் ஒன்றுமே அறியாத பச்சிளம் குழந்தைகள் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகின. தடுக்க வந்த பள்ளியின் முதல்வரும் துப்பாக்கிச்சூட்டில் பலியானார். மேலும், குழந்தைகளை சுட்ட நபர், தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டான் என்றும், இவன் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியானதாக மற்றொரு தகவலும் தெரிவிக்கின்றன.

முதல்கட்ட தகவல்படி, 18 குழந்தைகள் உட்பட 27 பேர் பலியாகி இருப்பதாக தெரியவந்துள்ளது. பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவத்தை தொ டர்ந்து பக்கத்து வகுப்பறைகளில் இருந்த குழந்தை களை ஆசிரியர்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து சென்றனர்.இதுகுறித்து போலீசா ருக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏராளமான வாகனங்களில் போலீசார் அங்கு வந்து குவிந்தனர்.

சுட்டவர் பள்ளியில் பயிலும் குழந்தை ஒன்றின் தந்தை எனத் தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கி சூடு நடத்தியவரை போலீஸ் சுட்டு கொன்று 2 துப்பாகிகளை பறிமுதல் செய்தனர்.