இதுக்குறித்து ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் அலுவலகத்தில் தான் பணி புரியும் மேசையிலேயே உணவு உண்ணும் ஊழியர்கள், கேடு விளைவிக்கக் கூடிய அசுத்த கிருமிகள் பெருகுவதற்கான இடமாக மாற்றிவிடுகிறார்கள் என குற்றஞ்சாட்டுகின்றனர்.


மேலும், பெண்களை விட ஆண்களே அதிகமாக அசுத்தமிக்கவர்களாக காணப்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆண்கள் பயன்படுத்தும் மவுஸ்களில் மட்டும் 40 விழுக்காடு பாக்டீரியாக்கள் காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

மேலும், மவுஸ்களுக்கு அடுத்ததாக அதிக கிருமிகள் நிறைந்த பொருளாக கணினி விசைப்பலகை உள்ளதாம்.

அடுத்ததாக தொலைபேசிகள் மற்றும் நாற்காலிகளில் அதிக கிருமிகள் உள்ளன.

கழிப்பறையில் தண்ணீர் பாய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் குழாயின் (Toilet Flush) கைப்பிடியை விட கணினி மவுஸ்களில் இரண்டு மடங்கு பாக்டீரியாக்கள் காணப்படுகிறதாம்.

முன்னதாக, மூன்று வெவ்வேறு அலுவலக இடங்களிலுள்ள 40 மேசைகளிலிருந்து எடுக்கப்பட்ட 158 பொருட்களையும் 28 டாய்லெட் சீட்கள் உட்பட கழிப்பறை பொருட்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்குப் பயன்படுத்தினர்.

தொழில்நுட்ப மேலாளரான பீட்டர் பாரட் இது குறித்து கூறும்போது, தற்போது அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் மதிய நேர உணவை அவர்கள் பணியாற்றும் மேசையிலேயே வைத்து உண்பதுடன் உணவு உண்ணும் நேரத்தில் இணையத்தை பார்வையிடுவது அல்லது தொடர்ந்து தட்டச்சு செய்வதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளனர்.

இதனால் உணவு பொருட்கள் கணினிகளில் குறிப்பாக, மவுஸ், கீபோர்ட் மீது படிந்துவிடுகின்றன.

இதனால், பாக்டீரியா உள்ளிட்ட நுண் கிருமிகள் பெருகுவதற்கு ஏற்ற இடமாகவும் அவை மாறிவிடுகின்றன.

குறிப்பாக அலுவலகங்களில், மின்னணு பொருட்கள் அடிக்கடி சுத்தம் செய்யப்படாததால் கிருமிகள் பரவு கின்றன என்று பீட்டர் பாரட் கூறுகிறார்.

அதுமட்டுமல்லாது, அதிக கிருமிகள் கொண்டவைகளாக சமையலறை, வாகன ஸ்டியரிங், நாற்காலிகள், ஷாப்பிங் டிராலிகள், லிப்ட் பட்டன்கள் என பல இடங்களில் கிருமிகள் வாழ்வதாக ஆய்வு தெரிவிக்கிறது.

Post Tags: