பார்வை சரியில்லை என்றோ, தலைவலி என்றோ, எழுத்துகள் தெரியவில்லை என்றோ சொல்கிற குழந்தைகளை பல பெற்றோரும் அத்தனை சீக்கிரம் நம்புவதில்லை. படிப்பிலிருந்து தப்பிக்க அவர்கள் சொல்கிற சாக்குகளில் ஒன்றாகவே இதையும் பார்க்கிறார்கள். ‘‘கிட்டப்பார்வை எனப்படும் myopia இன்று பள்ளிக்குழந்தைகளிடமே அதிகம் இருப்பதாகவும், அதற்குத் தீர்வாக கண்ணாடி போட அறிவுறுத்தினால் பல பெற்றோரும் அதை தவிர்க்கவே நினைக்கிறார்கள்’’ என்கிறார் பிரபல கண் மருத்துவர் காயத்ரி ஸ்ரீகாந்த்.
பார்வைக் கோளாறு என்பது ஆண், பெண் குழந்தைகளிடம் சம அளவில் இருப்பதையும், தேவைப்படுகிற போது கண்ணாடி போட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறார் அவர். ‘‘‘அவசியம் கண்ணாடி போடணுமா?’, ‘எத்தனை வருஷத்துல கழட்டலாம்?’,
‘மருந்து மாத்திரைல சரி பண்ணிட முடியாதா?’ ‘கேரட், கீரை சாப்பிட்டா, கண்ணாடியைத் தவிர்த்துடலாமா?’, ‘டி.வி பார்க்க வேணாம்னு சொல்லுங்க... அதைக் குறைச்சாலே கண் சரியாயிடுமில்லையா?’ - அனேகமா எல்லா பெற்றோரும் இந்தக் கேள்விகளோடத்தான் வராங்க. அவசியமில்லாம எந்த டாக்டரும் கண்ணாடி போடச் சொல்றதில்லை.
கண்கள்ல பிரச்னைங்கிறது மரபு சம்பந்தப்பட்டதாகவோ, விழித்திரை, கருவிழி சம்பந்தப்பட்டதாகவோ இருக்கலாம். மாத்திரை, மருந்து மூலம் சரிப்படுத்தற மேஜிக்கெல்லாம் இதுல சாத்தியமில்லை. அதே மாதிரி கேரட்டும் கீரையும் சாப்பிடறது மூலமா பார்வைக்கோளாறு சரியாயிடுங்கிறது தவறான நம்பிக்கை. கேரட் மற்றும் பச்சைக் கறிகாய்கள்ல பீட்டா கேரட்டின் சத்து இருக்கும்.
அது செரிமானத் தன்மையால் வைட்டமின் ஏ-வாக மாறும். கண்களுக்கு மிகமிகச் சிறிய அளவே வைட்டமின் ஏ தேவை. அதனால கேரட்டும் பச்சைக் காய்கறிகளும் சாப்பிட்டா பார்வை சரியாகும்னு சொல்றது ரொம்பவே அபத்தமானது. டி.வி பார்த்தா பார்வை பாதிக்கப்படுங்கிற தவறான எண்ணமும் பலருக்கு உண்டு. டி.வி பார்க்கறதால தலைவலி வரலாம். கண்கள் சிவந்து, தண்ணீர் வரலாமே தவிர, பார்வை பாதிக்கப்படாது. டி.வி பார்க்கறதால கிட்டப்பார்வை, தூரப்பார்வை வராது.
இந்த மாதிரி தவறான நம்பிக்கைகளை வளர்த்துக்கிட்டு, குழந்தைகளோட பார்வைப் பிரச்னைகளை அலட்சியம் பண்ணாம, சரியான நேரத்துல, சரியான மருத்துவரோட அறிவுரையின் பேர்ல, அவசியம் வரும் போது குழந்தைகளுக்கு கண்ணாடி போடறது பாதுகாப்பானது. கண்ணாடி போடறதால அழகோ, தோற்றமோ மாறிடாது.
21 வயசு வரை கண்ணாடி போட்டுட்டு, அதன் பிறகு மருத்துவரோட ஆலோசனையின் பேர்ல கண்ணாடியை எடுத்துட்டு, அறுவை சிகிச்சை செய்துக்கலாம்.’’