பீர் குடித்தால் இருதய நோய் தாக்குதல் குறையும் என தெரியவந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த நிபுணர்கள் ஒயின் மற்றும் பீர் குடிக்கும் 2 லட்சம் பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களின் உடல் நலனில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என கேட்டறிந்தனர்.

அவர்களில் மிதமான அளவு பீர் குடித்து வருபவர்களுக்கு இருதய நோய் பாதிப்பு குறைந்து இருந்தது. அதாவது 31 சதவீதம் பேர் இருதய நேய் பாதிப்பு ஏற்படாமல் இருந்தனர். இதற்கு ரத்தக் குழாய்களில் அடைப்பு மற்றும் நோய் ஏற்படாததே காரணம் என கூறப்படுகிறது.

பீர் பானத்தில் அதிக அளவில் தண்ணீர் உள்ளது. இதனால் அதை குடித்தவுடன் அதில் உள்ள ஆல்கஹாலை உடல் குறைந்த அளவில் மட்டும் எடுத்து கொள்கிறது. இதனால் குறைந்த அளவில் பீர் குடித்தால் இருதய நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும். அதே நேரத்தில் அளவுக்கு அதிகமாக குடித்தால் பாதிப்பு ஏற்படும் என மற்றொரு ஆய்வில் தெரியவந்துள்ளது.