இந்தோனேசியாவின் சுமத்திரா தீவுகளில் உள்ள அகதிகள் முகாமில், மியான்மாரில் இருந்து வந்த முஸ்லிம் மற்றும் புத்த மதத்தைச் சேர்ந்த அகதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இவர்கள் இரும்புக் கம்பி, மரக் கட்டைகள் மற்றும் கத்தியைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். 2 மணி நேரம் நீடித்த இந்த மோதலில் 8 பேர் உயிரிழந்தனர்.


முகாமில், சமீபத்தில் மியான்மாரில் புத்த மதத்தினருக்கும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கும் இடையே நடந்த கலவரங்கள் குறித்து பேச்சுகள் நடந்ததுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றி அங்கு இருந்த இருதரப்பினரும் மோதலில் ஈடுபட்டனர். ஒவ்வொரு ஆண்டும் மியான்மாரில் இருந்து ஆயிரக்கணக்கான ரோஹிங்யா இன மக்கள் அகதிகளாக இந்தோனேசியா, தாய்லாந்து, மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு சென்ற வண்ணம் இருகின்றனர்.

ஆனால் கடந்த ஒரு வருட காலமாக  மியான்மாரில் நடந்து வரும் கலவரங்கள் காரணமாக இந்தோனேசியாவில் அகதிகளின் வருகை அதிகரித்துள்ளது. மியான்மாரில் மட்டும் 8 லட்சம் ரோஹிங்யா இன மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் வங்கதேசத்தில் இருந்து சட்டத்துக்கு புறம்பாக மியான்மாரில் குடியேறியவர்கள். அவர்கள் மியான்மாரின் குடிமக்கள் இல்லை என்று மியான்மர் அரசு அவர்களின் குடியுரிமையை மறுத்து விட்டது. வங்கதேசமும் அவர்களது குடியுரிமையை மறுத்துவிட்டது.

Post Tags: